இந்திய கிரிக்கெட்டின் ஸ்டார் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்த ஐபிஎல் தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியிருக்கிறார். குஜராத் டைடன்ஸ் அணிக்கு 2 ஆண்டுகளாக கேப்டனாக இருந்தாலும், தாங்கள் வளர்த்த பிள்ளை அடுத்த அணியில் விளையாடுவதை விரும்பாத மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அவருக்காக பெரிய தொகையை செலவிட்டு அழைத்து வந்திருக்கிறது. 17 கோடி ரூபாய் என அதிகாரப்பூர்வமாக கூறினாலும் திரைமறைவில் மிகப்பெரிய எக்ஸ் தொகை அவருக்காக கைமாறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியைவிட்டு எதற்காக வெளியே சென்றாரோ, அதைவிட மேலான டிமாண்டுகளுக்கு ஓகே சொல்லி அழைத்து வந்திருக்கிறது மும்பை.
அவர் மும்பை அணியை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு கேப்டன் பதவி மற்றும் பிராண்டு ஒப்பந்தங்களை அப்போது கேட்டார். அதற்கு அப்போது செவி சாய்க்காத மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், குஜராத் அணியை கேப்டனாக சாம்பியனாகவும், அடுத்த ஐபிஎல் தொடரில் அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றதையும் பார்த்து ஹர்திக் பாண்டியாவின் டிமாண்டுகளுக்கு இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறது. அதாவது அப்போது பாண்டியா கேட்டதைவிட இருமடங்கு டிமாண்டை இப்போது ஒகே செய்திருக்கிறது மும்பை.
அத்துடன் பாண்டியாவுக்கு ராஜமரியாதை கொடுத்து வரவேற்கவும் தயாராகிவிட்டது மும்பை நிர்வாகம். ஆகாஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானி ஆகியோர் தங்களின் எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடங்களில் ஹர்திக் பாண்டியா வருகையை வானளவ புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். இதை பார்க்கும்போதே அவர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது தெள்ளதெளிவாக தெரிகிறது. அத்துடன் பாண்டியாவின் வருகை கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவின் இடத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஒருவேளை இந்த சீசன் முடிவதற்கு உள்ளாகவே மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பு பாண்டியாவிடம் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியிருப்பதை எண்ணி மெய்சிலிர்த்து போய் இருக்கிறார் ஹர்திக் பாண்டியா. மும்பை அணிக்கு பாண்டியா திரும்பியதை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியில் புகைப்படம் எடுத்தும், முதன்முதலாக அந்த அணி தன்னை ஐபிஎல் தொடருக்கு ஏலம் எடுத்த வீடியோவை பதிவிட்டும் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் பாண்டியா.
மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்தில் புயலை கிளப்பபோகும் 5 அணிகள்..! ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ