ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்த வீரர்களுக்கு தான் ஜாக்பாட்... பட்டையை கிளப்பும் 5 இந்திய பாஸ்ட் பௌலர்கள்!
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ள 5 இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை இங்கு காணலாம்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் வரும் நவ. 24 மற்றும் நவ. 25 ஆகிய இரு நாள்களுக்கு நடைபெறுகிறது. சௌதி அரேபியாவின் துறைமுக நகரம் ஜெட்டாவில் இந்த முறை ஐபிஎல் மெகா ஏலம் (IPL 2025) நடைபெறுகிறது. 1,165 இந்திய வீரர்கள் மற்றும் 409 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 1,574 வீரர்கள் ஏலத்திற்கு பதிவு செய்துள்ளனர். இதில் 320 Capped வீரர்கள், 1,224 Uncapped வீரர்கள் மற்றும் 30 அசோசியட் நேஷன்ஸின் வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
ஏலத்திற்கு முன் வரை 10 அணிகளும் 46 வீரர்களை தக்கவைப்பதுள்ளது. அதேபோல் 10 அணிகளுக்கும் தலா ரூ.120 கோடி ஏலத்தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்தம் ரூ.1200 கோடியில் ரூ.558.5 கோடியில் செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையில்தான் 10 அணிகளும் 204 வீரர்களை எடுக்க உள்ளது. இந்நிலையில், இந்த 2024 வீரர்களில் பல அணிகளுக்கு முன்னணி இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் தேவை எனலாம். அப்படியிருக்க இந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ள 5 இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை இங்கு காணலாம்.
மேலும் படிக்க | கம்பீர் பத்திரிக்கையாளர் சந்திப்புகூட நடத்த லாயக்கில்லை - விளாசிய சஞ்சய் மஞ்சரேக்கர்
1. அர்ஷ்தீப் சிங்
பஞ்சாப் கிங்ஸ் இவரை விடுவித்தாலும் ஏலத்தில் பல கோடிகளை கொட்டி எடுக்க முற்படும். இடதுகை இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் கிடைப்பது அரிது. அதுவும் இந்திய அணியில் தற்போது கலக்கி வரும் அர்ஷ்தீப் சிங்கை (Arshdeep Singh) எடுக்க பல அணிகள் முட்டிமோதும். மும்பை இந்தியன்ஸ், டெல்லி, ஆர்சிபி அணிகள் கூட கோடிகளை அள்ளி வீசலாம்.
2. முகமது ஷமி
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் ஷமி (Mohammed Shami). தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இவர் ஃபிட்டாகிவிட்டால் பல அணிகள் இவரை எடுக்க முட்டிமோதும்.
3. ஹர்ஷல் பட்டேல்
டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஆன ஹர்ஷல் பட்டேல் (Harshal Patel) கடந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர். தற்போது ஐபில் ஏலத்தில் இவரை சிஎஸ்கே முதல் பல அணிகள் எடுக்க முற்படும்.
4. துஷார் தேஷ்பாண்டே
சிஎஸ்கே இவரை விடுவித்தாலும் அடுத்து நிச்சயம் ஏலத்தில் எடுக்க முற்படும். ஓப்பனிங் மற்றும் டெத் ஓவர்களில் மிரட்டலாக பந்துவீச தேஷ்பாண்டே (Tushar Deshpande) சிறந்த ஆப்ஷன் ஆகும். மும்பை, டெல்லி, பஞ்சாப் முதல் பல அணிகள் இவருக்கு குறிவைக்கும்.
5. நடராஜன்
எஸ்ஆர்ஹெச் அணி இவரை விடுவித்தாலும் நிச்சயம் நடராஜனை (Natarajan) எடுக்க முயற்சிக்கும். சிஎஸ்கே இவரை எடுக்க பல ஆண்டுகளாக முயற்சிக்கிறது. இருப்பினும் இந்திய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கிடைப்பது அரிது என்பதால் அனைத்து அணிகளும் நடராஜனுக்கு போட்டிப்போடும்.
மேலும் படிக்க | பெர்த் டெஸ்டில் ரோஹித் சர்மா இல்லை! இவர் தான் கேப்டன்! கம்பீர் அதிரடி முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ