வரும் நவம்பர் 22-ம் தேதி பெர்த்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்டில் ரோஹித் சர்மா இல்லை என்றால் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்படுவார் என்று தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உறுதிப்படுத்தினார்.
ரோஹித் சர்மாவிற்கு பதில் தொடக்க ஆட்டக்காரராக அபிமன்யு ஈஸ்வரன் அல்லது கே.எல் ராகுல் ஆகியோரில் ஒருவர் விளையாடுவார் என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணி இரண்டு பேட்ச்சாக ஆஸ்திரேலியா செல்கிறது. முதல் பேட்ச் நவம்பர் 10 ஆம் தேதி புறப்பட்ட நிலையில், இன்று அடுத்த பேட்ச் கிளம்பி உள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு புறப்படும் முன்பு, மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த கம்பீர், "தற்போது வரை ரோஹித் சர்மா விளையாடுவது பற்றிய எந்த தகவலும் இல்லை. அவர் விளையாடுவார் என நம்புகிறேன்" என்று கம்பீர் கூறினார்.
ரோஹித் இடத்தில அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் KL ராகுல் உள்ளனர். மேலும் பேக்கப் வீரர்களை தயாராக வைத்துள்ளோம். சிறந்த பிளேயிங் 11 உடன் விளையாடுவோம் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஏ அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணிக்கும் இந்தியா ஏ அணிக்கும் பயிற்சி ஆட்டம் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவை ரத்து செய்யப்பட்டன.