ICC World Cup 2023, Virat Kohli: உலகக் கோப்பை தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணி இன்று (அக். 8) மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து 199 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 46 ரன்களையும், வார்னர் 41 ரன்களையும் எடுத்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணி பந்துவீச்சு தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், பும்ரா, குல்தீப் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின், ஹர்திக் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 200 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்தியா துரத்தியது. ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 


இலக்கு குறைவாக இருந்தாலும் இந்தியா முதல் ஓவரில் இருந்தே திணறியது எனலாம். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் டக்-அவுட்டானார். தொடர்ந்து, ஹேசில்வுட் வீசிய அடுத்த ஓவரிலேயே ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டக்-அவுட்டாக, இந்தியா 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 


மேலும் படிக்க | சேப்பாக்கத்தின் கில்லி ஜடேஜா... அவரிடம் அதிகமுறை ஆட்டமிழந்தவர் யார் தெரியுமா...?


அந்த நேரத்தில், விராட் கோலி - ராகுல் ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அவர்கள் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை கரை சேர்த்தனர் எனலாம். விராட் கோலி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது ஒருபுறம் இருக்க, விராட் கோலி சச்சினின் ஒரு சாதனையை இன்றைய போட்டியில் முறியடித்தார். அதாவது, வைட் பால் ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்காக அதிக ரன்களை எடுத்தவர்களில் சச்சினை முந்தி, விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். 


சச்சின் ஐசிசி தொடர்களில் 61 போட்டிகளில் விளையாடி 2,629 ரன்களை எடுத்திருந்தார். தற்போது விராட் அவரது 67ஆவது போட்டியில் 2,700 ரன்களை கடந்து இந்த சாதனையை படைத்தார். வைட் பால் ஐசிசி தொடர்கள் என்றபோது, ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி உள்ளிடவை கணக்கில் எடுக்கப்படும். 


இதில் சச்சின் டெண்டுலகர் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விளையாடியது இல்லை. ஆனால், விராட் கோலி இந்த மூன்று தொடர்களிலும் விளையாடி உள்ளார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  இந்தியாவின் இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 2,422 ரன்களுடனும், யுவராஜ் 1,707 ரன்களுடனும், கங்குலி 1,671 ரன்களுடனும், தோனி 1,492 ரன்களுடனும், டிராவிட் 1,487 ரன்களுடனும் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 


மேலும் படிக்க | ஆஸ்திரேலியா ஆல்-அவுட்... சேப்பாக்கத்தில் சுழல் சூறாவளி - எளிதாக வெற்றிபெறுமா இந்தியா?
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ