Royal Challengers Bangalore: 17 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன. கொல்கத்தா அணி 3 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி அணிகள் 2008ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வருகின்றன, ஆனால் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும் குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) அணி 17 சீசன்களில் 9 முறை அரையிறுதி/பிளே ஆப் சுற்றுகளுக்கு தகுதிபெற்றுள்ளது. அதிலும் 2009, 2011, 2016 ஆகிய மூன்று சீசன்களில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி, பாப் டூ பிளேசிஸ் உள்ளிட்டோர் பல்வேறு சீசன்களில் தொடர்ந்து கேப்டன்களாக செயல்பட்டுள்ளனர். கெவின் பீட்டர்சன், ஷேன் வாட்சன் ஆகியோரும் சில போட்டிகளில் கேப்டன்களாக செயல்பட்டுள்ளனர். 


இவர்கள் மட்டுமின்றி கிறிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் இருந்தாலும் ஆர்சிபியால் ஒருமுறை கோப்பையை வெல்லவில்லை. இதனால், ஆர்சிபி (RCB) மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது முக்கிய காரணம், பெரிய பெரிய வீரர்களை மட்டும் ஏலத்தில் அதிக தொகை கொடுத்து எடுக்கிறது என்பதுதான். அதுமட்டுமின்றி பல முக்கிய வீரர்களை தவறான அணுகுமுறையால் அடிக்கடி கழட்டிவிடுவதும் ஆர்சிபி மீது வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானது. 


மேலும் படிக்க | மெகா ஏலத்தில் இந்த 3 விக்கெட் கீப்பர்களுக்கு காத்திருக்கு ஜாக்பாட்... கோடிகள் கொட்டும்!


அந்த வகையில், ஐபிஎல் வரலாற்றில் (IPL History) ஆர்சிபி இந்த 3 வீரர்களை விடுவித்ததன் மூலம் பெரிய தவறை செய்ததாக ரசிகர்கள் பலரும் கருதுகின்றனர். அந்த 3 வீரர்கள் யார், அவர்களை அணியில் இருந்து தூக்கியதால் பறிபோன வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து இதில் விரிவாக காணலாம். 


ஹர்ஷல் பட்டேல்


ஹர்ஷல் பட்டேல் (Harshal Patel) ஆர்சிபிக்கு வெற்றிக்கரமான வேகப்பந்துவீச்சாளராகவே இருந்தார். அதிகமான ரன்களை வாரிவழங்கினாலும் கூட டெத் ஓவர்களில் விக்கெட் எடுக்கும் திறன் இவரிடம் இருந்தது. பர்பிள் கேப் வென்ற இவரை ஆர்சிபி சென்ற சீசனில் கழட்டிவிட்டது பெரும் ஆச்சர்யத்தை அளித்தது. இவர் 2024 சீசனில் ஆர்சிபி அணியில் இருந்திருந்தார் நிச்சயம் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். 2024 சீசனில் பஞ்சாப் அணிக்கு ஹர்ஷல் பட்டேல் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிளே கேப்பை வென்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


வஹிந்து ஹசரங்கா


சுழற்பந்துவீச்சில் உதவிகரமாக இருந்த ஹசரங்கா (Wanindu hasaranga) தற்சமயம் உலகத்தர ஆல்-ரவுண்டராக டி20இல் வளர்ந்திருக்கிறார். அப்படியிருக்கையில் ஆர்சிபி இவரை அணியில் எடுத்து போதுமான வாய்ப்புகளை வழங்காமல் வெளியேற்றியது பெரும் தவறாய் போனது. 2024 சீசனில் ஹசரங்கா விளையாடாவிட்டாலும் கூட அவரை தக்கவைத்திருக்க வேண்டும். ஆர்சிபியில் தற்போது தரமான ஆல்-ரவுண்டர்கள் இல்லாததற்கு இதுபோன்ற சில நகர்வுகளும் முக்கிய காரணம் ஆகும். 


யுஸ்வேந்திர சஹால்


விராட் கோலியை போல் ஆர்சிபியின் நிரந்தர உறுப்பினராக சஹால் (Yuzvendra Chahal) இருப்பார் என பல பேரால் நம்பப்பட்டது. ஆனால், கடந்த 2022 மெகா ஏலத்தை முன்னிட்டு சஹாலை ஆர்சிபி விடுவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் தற்போது சஹால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்று வெற்றிகரமான ஸ்பின்னராக வலம் வருகிறார். மிடில் ஓவர்களில் மட்டுமின்றி டெத் ஓவர்களிலும் கூட எதிரணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்கிறார் சஹால். சஹாலை விடுவித்த பின்னர் அந்த இடத்திற்கு ஒரு நிலையான ஸ்பின்னரை ஆர்சிபி எடுக்கவே இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் சஹால் ஆர்சிபியில் விளையாடியிருந்தார் நிச்சயம் கப் அவர்களின் கைகளுக்கு எட்டியிருக்கலாம்...


மேலும் படிக்க | ஓய்வை அறிவித்தாரா தோனி? சிஎஸ்கே-வின் பதிவால் குழப்பம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ