மெகா ஏலத்தில் இந்த 3 விக்கெட் கீப்பர்களுக்கு காத்திருக்கு ஜாக்பாட்... கோடிகள் கொட்டும்!

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த 3 விக்கெட் கீப்பர்கள் வரும்பட்சத்தில், நிச்சயம் இவர்கள் பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள். அவர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம். 

ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. அதேபோல், ஐபிஎல் ஏலத்திற்கான விதிகளையும் அணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

1 /8

ஐபிஎல் 2025 (IPL 2025) மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடைபெறலாம் என கூறப்படுகிறது. அதேபோல், ஏலத்தின் விதிகள் இம்மாதமே வெளியாகலாம்.   

2 /8

அப்படியிருக்க வரும் நவம்பர் மாதத்திற்குள் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைக்கின்றன, யார் யாரை விடுவிக்கின்றன என்ற விவரம் (IPL Retention Rules) தெரிந்துவிடும்.   

3 /8

பெரும்பாலும் 4 வீரர்களை தக்கவைக்க அனுமதி வழங்கப்படும் என்றும் மெகா ஏலத்தில் 2 RTM கார்டுகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.   

4 /8

இந்த 4 வீரர்களில் வெளிநாட்டு வீரர்கள், உள்நாட்டு வீரர்கள், Uncapped வீரர்கள் என பாகுபாடு இன்றி யாரை வேண்டுமானாலும் தக்கவைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.   

5 /8

அந்த வகையில், இந்த 3 விக்கெட் கீப்பர்களை (Three Wicket Keepers) அந்தந்த அணிகள் விடுவிக்கும்பட்சத்தில், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் (IPL 2025 Mega Auction) இவர்கள் நிச்சயம் கோடிகளை குவிப்பார்கள். அந்த 3 விக்கெட் கீப்பர்கள் குறித்து இதில் காணலாம்.   

6 /8

ஜித்தேஷ் சர்மா: கடந்த சீசசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டார், ஜித்தேஷ் சர்மா (Jitesh Sharma). ஆனாலும், ஷிகர் தவாண் காயத்திற்கு பின் கேப்டன்ஸி சாம் கரனுக்கே வழங்கப்பட்டது. இவரை பஞ்சாப் தக்கவைக்காதபட்சத்தில் ஆர்சிபி, சிஎஸ்கே உள்ளிட்ட அணிகள் இவரை நிச்சயம் பெரிய தொகைக்கு எடுக்க முயற்சிக்கும். இவர் அதிரடிக்கு பெயர் பெற்றவர் ஆவார்.   

7 /8

இஷான் கிஷன்: இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் செல்லப்பிள்ளை என்றாலும் 4 வீரர்களுக்கு மேல் தக்கவைக்க இயலாது என்பதால் இவர் நிச்சயம் ஏலத்திற்கு வருவார். பல அணிகள் இஷான் கிஷனை (Ishan Kishan) எடுக்கும் முயற்சியில் இறங்கும். இருப்பினும் இவருக்கு மும்பை அணி RTM கார்டு பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.   

8 /8

துருவ் ஜூரேல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வளர்த்தெடுத்த இளம் சிங்கம் இந்த துருவ் ஜூரேல் (Dhuruv Jurel). ஒருவேளை ராஜஸ்தான் அணியால் இவரை தக்கவைக்க இயலவில்லை என்றால் ஏலத்திற்கு வருவார். அவர் ஏலத்திற்கு வரும்பட்சத்தில் பல அணிகள் இவருக்கு கடுமையாக முயற்சி செய்யும். இந்திய விக்கெட் கீப்பர் என்பதாலும், மிடில் ஆர்டரில் தேர்ந்த பேட்டர் என்பதாலும் இவருக்கு கோடிகள் கொட்டும். ராஜஸ்தான் RTM கார்டை கையில் தயாராக வைத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.