டி20 உலகக் கோப்பை வெல்ல மாஸ் திட்டம்... இப்போதே களத்தில் இறங்கிய நடப்பு சாம்பியன்!
Cricket News In Tamil: டி20 உலகக் கோப்பை தொடர் மனதில் வைத்து நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Cricket News In Tamil: கிரிக்கெட்டில் இப்போது ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி தொடர்கள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை தொடர் ஆகியவை நடைபெற்றது. வரும் புத்தாண்டு ஜூன் மாதத்தில் டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் நடைபெற உள்ளது. தொடர்ந்து அடுத்தாண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும், ஒருநாள் போட்டி வடிவில் சாம்பியன்ஸ் டிராபி தொடரும் நடைபெற உள்ளது.
இப்படி அடுத்தடுத்து ஐசிசி தொடர் நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணியும் தங்களின் ஐசிசி கோப்பை கனவுகளை அடையவும், எண்ணிக்கைகளை அதிகரிக்கவும், உலக கிரிக்கெட்டில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தவும் தொடர்ந்து பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றன எனலாம். குறிப்பாக, இந்தியா (Team India), ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணி ஒவ்வொரு கோப்பையையும் முன்வைத்து பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் தற்போது இயங்கி வருகிறது எனலாம்.
சூழல் இப்படியிருக்க அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் மனதில் வைத்து நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் டி20 கேப்டன் கைரன் பொல்லார்ட்டை தங்கள் அணியின் உதவி பயிற்சியாளராக (Assistant Coach) அறிவித்திருக்கிறது. அதாவது டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற இருப்பதால், அதன் சூழலை நன்கு அறிந்தவரும், டி20 போட்டிகளில் ஜாம்பவானாக விளங்கும் பொல்லார்ட்டை இங்கிலாந்து தேர்வு செய்திருக்கிறது.
மேலும் படிக்க | 2023இல் பிஸ்தா பௌலர்கள் இவர்கள்தான்... அதிக விக்கெட்டுகளை எடுத்த டாப் 5 வீரர்கள்!
இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) நேற்று (டிச. 24) வெளியிட்ட அறிக்கையில்,"அடுத்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து ஆடவர் பயிற்சிக் குழுவில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் கீரன் பொல்லார்ட் (Kieron Pollard) நியமிக்கப்பட்டுள்ளார்" என குறிப்பிட்டுள்ளது.
இங்கிலாந்து அணி சமீபத்தில் மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில் ஒருநாள் தொடரில் 1-2 என்ற கணக்கிலும், டி20 தொடரில் 2-3 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. இதை கருத்தில் கொண்டும், டி20 உலகக் கோப்பையை தக்கவைக்கவும் இங்கிலாந்து அணி உள்ளூர் வீரரான கைரன் பொல்லார்டை தங்கள் வசம் கொண்டு வந்திருக்கிறது.
பொல்லார்ட் இதுவரை 600க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளை விளையாடி உள்ளார். மேலும், 2012ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஓர் அங்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொல்லார்ட் சர்வதேச அளவில் 101 டி20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடி உள்ளார். அதில் 25.30 என்ற சராசரி உடன் 1,569 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஆறு அரைசதங்கள் அடக்கம். மேலும் இவர் 135க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார்.
உலகளவில் நடைபெறும் டி20 தொடர்களிலும் முக்கிய வீரராக விளங்குபவர் பொல்லார்ட். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சுமார் 10 ஆண்டுக்கும் மேலாக விளையாடி வந்த இவர், தற்போது அந்த அணியின் பயிற்சியாளர்களுள் ஒருவராக உள்ளார். ஒட்டுமொத்தமாக 637 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்துடன் உள்ள பொல்லார்ட், 31.13 சராசரியில் 12,390 ரன்களை எடுத்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 58 அரைசதங்கள் அடக்கம். 150க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்தார். அவர் 4/15 என்ற சிறந்த பந்துவீச்சுடன், டி20 போட்டிகளில் 312 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.
மேலும் படிக்க | முகமது ஷமிக்கு மாற்று இந்த வீரர் தான்... மூன்று முக்கிய காரணங்கள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ