India vs Australia, Replacement For Rohit Sharma: வரும் நவம்பர் 22ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் (Border Gavaskar Trophy 2024-25) தொடங்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா மோத இருப்பதை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட இந்த தொடரும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு முக்கியம் என்றாலும் இந்தியாவுக்கு அதுதான் கடைசி டெஸ்ட் தொடர் ஆகும். தற்போது உள்நாட்டில் நியூசிலாந்து உடன் தொடரை இழந்தாலும், மூன்றாவது டெஸ்ட்போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில், ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றாக வேண்டும். இது சற்று கடினமான காரியம் ஆகும்.


ரோஹித் சர்மாவுக்கு மாற்று


இதனால், பலமான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாட வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு பல்வேறு பேக்அப் வீரர்களும் தயாராக உள்ளனர். அதிலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடரின் தொடக்கத்தில் ஒரு சில போட்டிகளை தனிப்பட்ட காரணங்களுக்காக தவறவிடுவார் என கூறப்படுகிறது. இதனால், 18 பேர் கொண்ட இந்திய அணியின் ஸ்குவாடில் ரோஹித் - ஜெய்ஸ்வால் இருவருக்கும் பேக்அப்பாக அபிமன்யூ ஈஸ்வரனுக்கு (Replacement For Rohit Sharma) வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு ருதுராஜ் கெய்க்வாட்டும் கடினமான போட்டியை அளித்தாலும் அபிமன்யூ ஈஸ்வரன் (Abhimanyu Easwaran) தொடர்ச்சியாக, அதுவும் பல சீசன்களாக சிறப்பாக விளையாடுவதால் அவருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க |  IPL 2025: 10 அணிகள் தக்கவைத்த வீரர்கள்... கையில் இருக்கும் RTM, ஏலத்தொகை - அனைத்தும் இதோ!


பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கு முன் வளர்ந்து வரும் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவின் சூழலுக்கு பழகப்படுவதற்கும், திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கும் விதமாக இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் (India A vs Australia A Unofficial Test) அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளை விளையாடும். அந்த வகையில், ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) தலைமையிலான இந்தியா ஏ அணி தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா ஏ உடன் இரண்டு போட்டிகளை விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று தொடங்கியது. இந்திய அணி இடம் கிடைத்தாலும் அபிமன்யூ ஈஸ்வரன் இந்த போட்டியிலும் விளையாடுகிறார்.


சதத்தை நெருங்கும் சாய் சுதர்சன்


இந்த போட்டியில் இந்திய ஏ அணி முதலில் பேட்டிங் செய்து 107 ரன்களுக்கு ஆல்அவுட்டானது, அதேபோல் ஆஸ்திரேலியாவும் இன்று 195 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. 88 ரன்கள் பின்னிலை உடன் இந்தியா ஏ அதன் பேட்டிங்கை இன்றே தொடங்கியது. சாய் சுதர்சன் (Sai Sudharsan) மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் 178 ரன்களுக்கு பார்டனர்ஷிப் அமைத்து இன்னும் ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். இரண்டாம் நாள் முடிவில் 208 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டும் இந்தியா ஏ இழந்துள்ளது. தற்போது இந்தியா ஏ அணி 120 ரன்கள் முன்னிலையுடன் உள்ளன. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதம் இருக்கின்றன. சாய் சுதர்சன் 96 ரன்கள், தேவ்தத் படிக்கல் 80 ரன்களுடன் நாளைய ஆட்டத்தை தொடங்குவார்கள்.


சொதப்பும் அபிமன்யூ, ருதுராஜ்


இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரர்களாக பார்க்கப்படும் அபிமன்யூ ஈஸ்வரன் 7 & 12 மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் 0 & 5 என இருவருமே சொதப்பி உள்ளனர். இன்னும் மற்றொரு டெஸ்ட் போட்டி இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ இடையே உள்ளது.  நவ.7ஆம் தேதி இரண்டாவது போட்டி மெல்போர்னில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியிலும் அபிமன்யூவும், ருதுராஜ் கெய்க்வாட்டும் சொதப்பினால் எதிர்காலத்தில் அந்த இடத்திற்கு சாய் சுதர்சன்தான் முதல் ஆளாக வருவார். 


மிரட்டும் சாய் சுதர்சன்


ஒருவேளை இந்த தொடரிலேயே கூட சாய் சுதர்சனை சர்ஃபரைஸாக இந்திய அணி அழைக்கலாம். தொடர்ந்து உள்ளூர் போட்டியிலும், தற்போது வெளிநாட்டிலும் ரன்களை குவித்து தனது திறனை நிரூபித்த சாய் சுதர்சன் நிச்சயம் இந்திய அணியில் விளையாட தகுதிபெற்றவர் என்பதில் சந்தேகமே தேவையில்லை. 


மேலும் படிக்க | IPL 2025: 10 அணிகள் தக்கவைத்த வீரர்கள்... கையில் இருக்கும் RTM, ஏலத்தொகை - அனைத்தும் இதோ!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ