India National Cricket Team: இந்தியா - ஆஸ்திரேலியா (India vs Australia) அணிகள் மோதினாலே கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலமாகிவிடுவார்கள். அது டி20, ஓடிஐ, டெஸ்ட் என எந்த பார்மட்டிலும் இந்த இரண்டு அணிகள் மோதினாலும் அனல் தெறிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உலகத்தரமான வீரர்கள் அடங்கிய இந்த இரண்டு அணிகளும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை, அதுவும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடப்போகிறது என்பதால் அனைவரு் பெருத்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் செப்டம்பர் மாதத்தில் வங்கதேச அணியுடனும், அக்டோபர் மாதத்தில் நியூசிலாந்து அணியுடனும் இந்திய அணி (Team India) உள்ளூரில் டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. அதை தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy) தொடரை இந்திய அணி விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவில் 2018 மற்றும் 2020இல் நடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களை இந்திய அணிதான் வென்றது.


ஆதிக்கம் செலுத்தும் இந்தியா


எனவே தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்க இந்தியா கடுமையாக முயலும். கடந்த 2018ஆம் ஆண்டிலும் சரி, 2020ஆம் ஆண்டிலும் சரி ஆஸ்திரேலியாவை அவர்களின் நாட்டிலேயே மண்ணைக் கவ்வ வைத்ததற்கு பல முக்கிய காரணங்கள் இருந்தன. விராட் கோலி கேப்டன்ஸி ஒருபுறம்; ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் உள்ளிட்ட அனுபவ பந்துவீச்சாளர்கள்; ரிஷப் பண்ட், சுப்மான் கில் போன்ற துடிப்பான இளம் வீரர்கள் இப்படி பலரின் பங்களிப்பு அதில் இருந்தது.


மேலும் படிக்க | விராட் கோலி குறித்து உணர்ச்சிமிக்க பேசிய தோனி! என்ன சொன்னார் தெரியுமா?


அதிலும், இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு பக்கபலமாக இருந்தவர்கள் புஜாராவும் (Pujara), ரஹானேவும் (Rahane). தற்போது இவர்கள் இல்லாமல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. சமீப காலமாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இவ்விருவரும் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவர்களுக்கு பதில் மிடில் ஆர்டருக்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது, இந்திய தேர்வுக்குழு. 


புஜாரா, ரஹானேவுக்கு பதில்


இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே பல இளம் வீரர்களுக்கு புஜாரா மற்றும் ரஹானேவின் கொடுக்கப்பட்டது. அதில், சுப்மான் கில், ரஜத் பட்டிதார், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல் ஆகியோர் அடக்கம். அந்த தொடரில் விராட் கோலியும் இல்லாததால் இவர்களில் பலருக்கும் வாய்ப்பு கிடைத்தது. வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விராட் கோலி நிச்சயம் விளையாடுவார். எனவே, புஜாரா, ரஹானே இடங்களுக்கு மட்டும் இரண்டு வீரர்கள் நிச்சயம் தேவைப்படும். புஜாரா 3ஆவது இடத்திலும், ரஹானே 5ஆவது இடத்திலும் இறங்குவார்கள். விராட் கோலி 4ஆவது இடத்தில் இறங்குவார்.


தினேஷ் கார்த்திக்கின் ஆரூடம்


இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் புஜாரா, ரஹானே இடங்களுக்கு முறையே சுப்மான் கில் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கலாம் என தினேஷ் கார்த்திக் (Dinesh Karthick) கருத்து தெரிவித்துள்ளார். தினேஷ் கார்த்திக்கின் இந்த பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான். புஜாரா போல சுப்மன் கில்லோ (Shubman Gill), ரஹானே போல சர்ஃபராஸ் கானும் (Sarfaraz Khan) விளையாடுவார்களா என நீங்கள் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் இல்லை. 


கில், சர்ஃபராஸ் கான் - ஏன்...?


ஆனால், இந்திய டெஸ்ட் அணியின் மூன்றாவது இடத்திற்கு சுப்மான் கில்லை விட பொறுத்தமானவரோ நீங்கள் பார்க்க முடியாது. அதேபோல்தான் சர்ஃபராஸ் கானையும்... சுப்மான் புது பந்து, பழைய பந்து இரண்டிலும் பொறுப்புடன் ஆடி ரன்களை பெறக்கூடியவர். சிறு சிறு பலவீனங்களில் இருந்து மீண்டுவிட்டால் சுப்மான் கில் அவரின் முரட்டு பார்மை வெளிப்படுத்துவார் எனலாம். சர்ஃபராஸ் கான் சுழலுக்கு எதிராக சிறப்பான ஷாட்களை வைத்திருக்கிறார், அச்சமின்றி விளையாடக்கூடியவர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 


வரும் செப். 5ஆம் தேதி தொடங்கும் துலிப் டிராபி தொடர் முதல் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடும் மிடில் ஆர்டர் வீரர்களைதான் ஆஸ்திரேலிய தொடருக்கு ரோஹித் சர்மா - கௌதம் கம்பீர் - அஜித் அகர்கர் கூட்டணி தேர்வு செய்யும். புஜாரா, ரஹானே இடங்களுக்கு சுப்மான் கில், சர்ஃபராஸ் கான் மட்டுமின்றி கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரஜத் பட்டிதர், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரேல் ஆகியோரும் கடுமையாக போராடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | தோனியை என்னால் மன்னிக்கவே முடியாது! கொதித்தெழுந்த யுவராஜ் சிங் தந்தை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ