விராட் கோலி குறித்து உணர்ச்சிமிக்க பேசிய தோனி! என்ன சொன்னார் தெரியுமா?

சமீபத்திய பேட்டி ஓன்றில் மகேந்திர சிங் தோனி விராட் கோலியுடன் தனது பந்தத்தை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

1 /6

விராட் கோலி தனது ஆக்ரோஷமான ஸ்டைலுக்காகவும், தோனி தனது அமைதியான பணிக்காகவும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளனர்.  

2 /6

2014 டிசம்பரில் டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பையும், 2016ம் ஆண்டில் ஒயிட்-பால் கேப்டன்சியையும் தோனி விராட் கோலியிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு விராட் கோலியின் கேப்டன்சியின் கீழ் கடைசி வரை தோனி ஒரு வீரராக செயல்பட்டார். ஆகஸ்ட் 15, 2020 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தோனி.  

3 /6

விராட் கோலி கேப்டனாக இருந்தாலும், டிஆர்எஸ் கேட்கும் போது தோனி கையை தூக்கினால் யோசிக்காமல் கோலி அம்பயரிடம் முறையிடுவார். இதுபோல நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது.   

4 /6

தற்போது ஒரு பேட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, விராட் கோலியுடன் தனது நட்பு குறித்து பேசியுள்ளார். "நாங்கள் 2008ம் ஆண்டு முதல் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி வருகிறோம். மேலும் நிறைய போட்டிகளில் ஒன்றாக பேட்டிங் செய்துள்ளோம்"  

5 /6

"எங்களுக்குள் வயது வித்தியாசம் இருக்கிறது, நான் ஒரு அண்ணனை போல பேசுவேன். உலக கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர்" என்று தோனி தெரிவித்துள்ளார்.  

6 /6

ரசிகர்கள் இவர்களை 'மஹிராத்' என்று அன்போடு அழைப்பது வழக்கம். தோனி ஓய்வு பெற்றதிலிருந்து, இருவரும் எப்போது ஒன்றாக விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.