`கண்ணில் தெரிந்த பயம்` ரோஹித்திற்கு அஃப்ரிடி போட்ட அந்த பந்து... கோலியின் ரியாக்சனை பாருங்க!
Asia Cup 2023: ரோஹித் சர்மாவை போல்டாக்கிய அஃப்ரிடியின் அந்த அச்சுறுத்தும் பந்தை கண்ட உடன், விராட் கோலி கொடுத்த ரியாக்சன் தான் தற்போது வைரலாகி வருகிறது.
Asia Cup 2023, IND vs PAK: ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற குரூப் சுற்று போட்டி மழை காரணமாக முடிவின்றி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணி தனது ஆரம்ப கட்ட பேட்டிங்கில் நேற்று கடுமையான தடுமாற்றத்தை கண்டது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் அச்சுறுத்தலுக்கு இந்திய அணியின் டாப்-ஆர்டர் பேட்டர் அடிபணிந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
இலங்கையின் கண்டியில் உள்ள பல்லேக்கலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மதியம் தொடங்கிய இந்த போட்டியில், அடிக்கடி மழை குறுக்கிட்டது. இந்த மழையினால் இந்தியா பேட்டிங்கின் போது இரண்டு முறை ஆட்டம் தடைப்பட்டு, சிறிது நேரத்திற்கு பிறகு தொடங்கப்பட்டது. 4.2 ஓவர்களில் விளையாடிக்கொண்டிருக்கும்போது மழை வந்தது. அதுவரை விக்கெட்டை இழக்காமல் விளையாடி வந்த இந்திய அணி, அதன் பின் விக்கெட்டை பறிகொடுக்க தொடங்கியது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஷாகின் ஷா அஃப்ரிடியின் அசத்தலான செட்-அப்பில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ரோஹித் சர்மா விக்கெட்டை பார்த்தோமானால், 4.2 ஓவர்களுக்கு பின் மழை விட்டு, பாகிஸ்தான் மீண்டும் பந்துவீச வந்தது. ஷாகின் வீசிய அந்த ஓவரில், அடுத்த மூன்று பந்துகள் (4.3, 4.4, 4.5) நல்ல குட் லென்த்தில் அவுட்-சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்டது. இதனை ரோஹித் தடுத்தாடிக்கொண்டிருந்தார். மேலும், ஷாகினிடம் அதுவரை இல்லாத அளவில் ரிதம் நன்றாக காணப்பட்டது.
மேலும் படிக்க | தொடரும் இந்தியாவின் இன்-ஸ்விங் பலவீனம்... இப்படியே போனா உலகக் கோப்பை அவ்வளவு தான்!
அந்த வேளையில், கடைசி பந்தை (4.6) அவர் ஸ்டெம்ப் லைனில் சற்று உள்ளே வரும்படி வீச, ரோஹித்தின் பேட் மற்றும் பேடுக்கு இடையே அழகாக நுழைந்து ஸ்டெம்பை பந்து பதம் பார்த்தது. ஷாகின் ஷா அஃப்ரிடி இந்த போட்டியில் மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், ரோஹித் சர்மாவின் விக்கெட்டைதான், தான் அதிகம் ரசித்து கொண்டாடியதாக ஷாகின் ஷா அஃப்ரிடி தெரிவித்திருந்தார். ஏனெனில், அந்த அளவிற்கு அந்த பந்து நேர்த்தியாக வீசப்பட்டது என்பது ஏற்றாக வேண்டும்.
இந்நிலையில், அஃப்ரிடியின் அச்சுறுத்தும் பந்துவீச்சை கண்டு, அடுத்து களம் இறங்க இருந்த விராட் கோலி கொடுத்த ரியாக்சன் தான் நெட்டிசன்களை கவர்ந்தது எனலாம். அடுத்து பேட்டிங் செய்ய பேடு கட்டி, ஹெல்மெட் அணிந்து தயாராக இருந்த விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு ஷாகின் அஃப்ரிடி வீசிய ஒரு பந்தை கண்டு, அவர் அதிர்ச்சி அடைந்து கொடுத்த ரியாக்சன் அஃப்ரிடியின் பந்துவீச்சு வீரியம் என்ன என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது எனலாம். உலகத் தரமான விராட் கோலியே சற்று பதுங்கும் வகையில் அந்த பந்துவீச்சு அமைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஷாகின் அஃப்ரிடி ஓப்பனிங்கில் மட்டுமின்றி, டெத் ஓவர்களிலும் பாண்டியா, ஜடேஜா ஆகியோரின் விக்கெட்டை எடுத்து சிறப்பான பங்களிப்பை எடுத்தார். இடது கை வேகப்பந்துவீச்சாளர்களிடம் இந்திய பேட்டர்களிடம் காணப்படும் இந்த பலவீனம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இதனை இந்தியா சரி செய்யாவிட்டால் 10 ஆண்டுகளாக நீடிக்கும் ஐசிசி கோப்பை கனவு இம்முறையும் கானல் நீராகிவிடும். அடுத்து நேபாளம் அணியுடன் இந்தியா நாளை (செப். 4) மோதுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ