IND vs PAK, Toss Update: ஆசிய கோப்பை தொடரில் இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் மோத உள்ளன. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியவை குரூப் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. ஒரு அணி குரூப்பில் இருக்கும் மற்ற 2 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். பின்னர், குரூப் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
சூப்பர்-4 சுற்றில் ஒரு அணி, மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும். இதில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும். இறுதிப்போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் செப். 17ஆம் தேதி நடைபெறும். நடப்பு ஆசிய கோப்பை தொடரில், முதல் போட்டியில் நேபாளம் அணியை பாகிஸ்தான் அணியும், இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியை இலங்கை அணியும் வீழ்த்தின. இதையடுத்து, குரூப் சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
Captain @ImRo45 has won the toss & #TeamIndia have elected to bat against Pakistan. #INDvPAK
A look at our Playing XI
Follow the match https://t.co/hPVV0wT83S#AsiaCup2023 pic.twitter.com/onUyEVBwvA
— BCCI (@BCCI) September 2, 2023
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மழை ஒரு காரணமாக இருந்தாலும் இரண்டாவது பேட்டிங்கை விட முதல் பேட்டிங்கே அதிக நன்மை தரும் என அதை தேர்வு செய்திருப்பதாக அவர் கூறினார். தொடர்ந்து, பாபர் அசாமும் தான் டாஸ் வென்றிருந்தாலும் பேட்டிங்கை தான் தேர்வு செய்திருப்பேன் என கூறினார்.
மேலும் எதிர்பார்க்கப்பட்டது போல் இஷான் கிஷன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், ஓப்பனிங்கில் இறங்கவில்லை, நிச்சயம் மிடில் ஓவரில் தான் இறங்குவார் என தெரிகிறது. அதேபோல், எட்டாவது வீரர் பெரிதாக பேசப்பட்ட நிலையில், ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், சிராஜ், பும்ரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டு ஷமி வெளியே அமரவைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
பிளேயிங் லெவன்
பாகிஸ்தான்: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்
இந்தியா: ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
மேலும் படிக்க | IND vs PAK: இந்தியாவுக்கு தான் வெற்றி, இதை செய்தால்... அக்தர் போட்ட வெடிகுண்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ