Rohit Sharma Lamborghini Car : இந்திய கிரிக்கெட் அணி தற்போது நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து மூன்று வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் முன்னணியில் உள்ளது. அந்த வகையில், இந்திய அணி தனது நான்காவது போட்டியில் வங்கதேச அணியை இன்று (அக். 19) எதிர்கொள்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்றைய போட்டி நடைபெறுகிறது. கடந்த அக். 14ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தான் உடன் அகமதாபாத்தில் மோதியதற்கு பின், அங்கிருந்து வீரர்கள் புனேவில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


215 கி.மீ., வேகம்


அந்த வகையில், மும்பையும், புனேவும் சற்று அருகருகே இருக்கும் நகரம் என்பதால் ரோஹித் சர்மா (Rohit Sharma) தனது சொந்த ஊரான மும்பைக்கு வந்து முதலில் தனது குடும்பத்துடன் தங்கி உள்ளார். பின்னர் மும்பையில் இருந்து புனேவில் தனது அணியுடன் இணைந்துள்ளார். 


மேலும் படிக்க | IND vs BAN: டாஸ் வென்றால் ரோஹித் இதைதான் செய்யணும்... ஆடுகளம் யாருக்கு சாதகம்?


அவர் மும்பையில் இருந்து புனே நகருக்கு மும்பை-புனே அதிவிரைவுசாலையில் (Mumbai - Pune Expressway) தனது லம்போர்கினி (Lamborghini) சொகுசு காரில் சென்றிருக்கிறார். அப்போது, அவர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. 200 கி.மீ., வேகத்திற்கும் அதிகமாக கார் ஓட்டி சென்ற ரோஹித் சர்மா, ஒரு கட்டத்தில் 215 கி.மீ., வேகத்தில் சென்றுள்ளார் எனவும் பதிவாகியுள்ளது. 


இதை தொடர்ந்து, அவருக்கு மூன்று விதமான அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோஹித் ஷர்மா நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்றது குறித்து கவலை தெரிவித்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், அவர் போலீஸ் துணையுடன் குழுப் பேருந்தில் பயணிக்க பரிந்துரைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ரசிகர்களின் அன்பு கட்டளை...


2023 புத்தாண்டு தினத்தையொட்டி, இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் அதிவேகமாக கார் ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கினார். இப்போதுதான் அவர் கொஞ்சம் கொஞ்சமாக காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். அந்த வகையில், ரோஹித் சர்மா இப்படி அதிவேகமாக கார் ஓட்டிச் சென்ற விவகாரம் ரசிகர்களை மிகவும் கவலைக்கொள்ள செய்துள்ளது. மேலும், இதுபோன்று மீண்டும் நடந்துகொள்ள வேண்டாம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ரோஹித்திற்கு அன்பு கட்டளை இடுகின்றனர்.


முரட்டு ஃபார்மில் ரோஹித்


நடப்பு உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா டக்-அவுட்டானார். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 130 ரன்களையும், பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில் 86 ரன்களையும் குவித்து நடப்பு தொடரில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் தக்க வைத்துள்ளார். மேலும் ரோஹித் சர்மா சிறந்த முறையில் அணியை வழிநடத்தி வரும் வேளையில், உலகக் கோப்பை கனவு இந்தியாவுக்கு பிரகாசமாகி உள்ளது. 


மேலும் படிக்க | ICC Men's ODI Ranking: ரோஹித் முன்னேற்றம், கோஹ்லி சறுக்கல்.. தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட ஐசிசி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ