RCB vs CSK: ஆர்சிபியை வீழ்த்த சிஎஸ்கே வைத்திருக்கும் பிளான் என்ன? திருப்புமுனை வீரர் யார்?
RCB vs CSK Match Update: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற என்ன வியூகத்தை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து இதில் அலசலாம்.
RCB vs CSK Match Update: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்றைய மும்பை - லக்னோ போட்டி உள்பட மொத்தம் 4 லீக் போட்டிகள் மீதம் உள்ளன. குறிப்பாக அடுத்த பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டன. கடைசியாக நான்காவது இடத்திற்கு மட்டுமே போட்டி நடைபெறுகிறது.
ஹைதராபாத் - குஜராத் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறியது. எனவே, சிஎஸ்கே, ஆர்சிபி, லக்னோ அணிகளில் ஒரு அணி மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். லக்னோ அணி சுமார் 310 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அந்த அணி நெட் ரன்ரேட் அதிகமாகும். அதன்பின் நாளை (மே 18) பெங்களூருவில் நடைபெறும் சென்னை - ஆர்சிபி போட்டியில் ஆர்சிபி குறைவான நெட் ரன்ரேட்டில் வென்றால் மட்டுமே லக்னோவால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.
சிஎஸ்கேவின் வியூகம் என்ன?
அதனால், சென்னை, ஆர்சிபி அணிகளுக்கு மட்டுமே அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும். அதிலும், ஆர்சிபி அணி வெற்றி பெற்றாலும் 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 18 ஓவர்களிலேயே இலக்கை அடைந்தாலோ மட்டும்தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். இருப்பினும் போட்டியை மழை முழுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது. அப்படி போட்டி மழையால் ரத்தானால் இரு அணிகளுக்கும் 1 புள்ளி வழங்கப்படும் என சிஎஸ்கே அணி தானாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.
மேலும் படிக்க | கவுதம் கம்பீர் மனம் திறந்து பாராட்டிய வீரர் டி20 உலக கோப்பையில் விளையாடுவாரா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தளவிற்கு சாதகமாக இருந்தாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது முரட்டு பார்மில் உள்ளது எனலாம். ஆர்சிபி விளையாடிய கடந்த 5 போட்டிகளையும் வென்று சிஎஸ்கேவையும் வீழ்த்தும் வெறியில் நாளைய போட்டியை எதிர்கொண்டு காத்திருக்கிறது. நாளை மழையால் போட்டி ரத்தாகாவிட்டால் ஆர்சிபி அணியை வீழ்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் என்ன வியூகத்தை கைக்கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.
முதலில் பந்துவீசினால்...
கண்டிப்பாக சிஎஸ்கே டாஸ் வென்றால் பந்துவீச்சை தேர்வு செய்வதே நல்லது. மழை குறுக்கிட்டாலும் அது சாதகமாக அமையும். அந்த வகையில், ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தால் சென்னை அணி அதன் துஷார் தேஷ்பாண்டே, கிலீசென் ஆகியோரை பவர்பிளேவில் பயன்படுத்த வேண்டும். தீக்ஷனாவும் பவர்பிளேவில் கைக்கொடுப்பார்.
சான்ட்னரும் பவர்பிளேவில் சிறப்பாக விளையாடுவார் என்றாலும் ஜடேஜா - சான்ட்னர் - தீக்ஷனா ஆகிய மூன்று ஸ்பின்னர்கள் தேவையா அல்லது தேஷ்பாண்டே - ஷர்துல் தாக்கூர் - கிலீசன் - சிமர்ஜித் சிங் ஆகிய நான்கு வேகப்பந்துவீச்சு ஆப்ஷன் தேவையா என்பதை நாளைய ஆடுகளத்தை பார்த்தே சிஎஸ்கே முடிவு செய்ய வேண்டும். இருப்பினும், 2 ஸ்பின்னர்கள், 4 வேகப்பந்துவீச்சு சிஎஸ்கேவுக்கு கைக்கொடுக்கலாம்.
பந்துவீச்சு பார்முலா...
கிலீசன் டெத் ஓவருக்கும் கைக்கொடுப்பார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியை கட்டுப்படுத்த சிமர்ஜித் சிங் - தேஷ்பாண்டே - கிலீசன் ஆகிய வேகப்பந்துவீச்சு கூட்டணியே பலனிக்கும். மிடில் ஆர்டரில் ரஜத் பட்டிதாரை அட்டாக் செய்ய சிமர்ஜித் சிங்கும்; மேக்ஸ்வெல், கேம்ரூன் கிரீன் ஆகியோரை அட்டாக் செய்ய ஜடேஜா - தீக்ஷனாவும் கைக்கொடுப்பார்கள். எனவே, சிஎஸ்கே 4 வேகப்பந்துவீச்சு - 2 சுழற்பந்துவீச்சு பார்முலாவுடன் செல்வதே நலம்.
பேட்டிங் ஆர்டர் வியூகம்
சிஎஸ்கே பேட்டிங் ஆர்டரில் கடந்த போட்டியை போன்று ஆடுவது நல்லது. சேஸிங் என்றால் ரச்சின் - ருதுராஜ் ஜோடி ஆரம்பத்தில் இருந்தே அட்டாக் செய்யலாம். அதாவது, ஒருமுனையில் ரச்சின் அட்டாக் செய்தால் ருதுராஜ் ரோட்டேட் செய்யலாம். ஆர்சிபி அணியில் ஸ்வப்னில் சிங் பந்துவீசும் போது ரச்சினும், சிராஜ் பந்துவீச்சை ருதுராஜூம் அதிரடியாக விளையாடுவது அவசியமாகும்.
வருவாரா தீபக் சஹார்?
அடுத்து டேரில் மிட்செல், சிவம் தூபே, ரிஸ்வி, ஜடேஜா, தோனி ஆகியோர் அடுத்தடுத்து களமிறங்க வேண்டும். ஒருவேளை சிஎஸ்கே டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்தாலும் இதே வியூகத்தைதான் பின்பற்ற வேண்டும். சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ், தூபே, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர்தான் முக்கிய வீரர்களாக செயலாற்ற வேண்டும். இம்பாக்ட் பிளேயரில் ரஹானேவை இறக்குவதா வேண்டாமா என்பதை சிஎஸ்கேதான் முடிவு செய்ய வேண்டும். மேலும், ஒருவேளை சான்ட்னரை அணியில் எடுக்கும்பட்சத்தில் இம்பாக்ட் வீரராக தீபக் சஹாரை அணியில் எடுத்தால் பவர்பிளேவில் பயனளிக்கலாம். இம்பாக்ட் வீரராக ரஹானே, தீபக் சஹாரை வைத்திருப்பது பலனளிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ