IPL 2024 RCB vs CSK : சிஎஸ்கேவுக்கு எதிராக டாஸ் ஜெயித்தால் ஆர்சிபி என்ன செய்ய வேண்டும்?

ஐபிஎல் 2024ல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 4வது அணி ஆர்சிபி, சிஎஸ்கே போட்டிக்கு பிறகு தெரியவரும் என்பதால், இப்போட்டி மீது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 17, 2024, 11:56 AM IST
  • ஆர்சிபி அணி நாளை என்ன செய்ய வேண்டும்?
  • ஆர்சிபி அணிக்கு இருக்கும் மற்றொரு நெருக்கடி
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிரகாசமான வாய்ப்பு
IPL 2024 RCB vs CSK : சிஎஸ்கேவுக்கு எதிராக டாஸ் ஜெயித்தால் ஆர்சிபி என்ன செய்ய வேண்டும்? title=

ஐபிஎல் 2024 இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்த்தா, ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் அணிகள் முன்னேறிவிட்ட நிலையில் எஞ்சிய ஒரு இடத்துக்கு இரண்டு அணிகளிடையே கடும் போட்டி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இரு அணிகளுக்கும் இடையே மே 18 ஆம் தேதியான நாளை நடைபெறும் போட்டிக்குப் பிறகு நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நான்காவது அணி எது என்பது முடிவாகும். அதாவது சிஎஸ்கே, ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி நாக் அவுட் போட்டியாகும். இப்போட்டியில் வெற்றி பெற்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட முடியும். ஆனால் ஆர்சிபி அணிக்கு அப்படியில்லை.  அந்த அணிக்கு ரன்ரேட் என்ற ஒரு சிக்கல் இருக்கிறது. அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றால் மட்டும் போதாது, அந்த அணியைவிட கூடுதலான ரன்ரேட் எடுக்க வேண்டிய நெருக்கடியும் ஆர்சிபி அணிக்கு இருக்கிறது.

மேலும் படிக்க | CSK: ஷாக்கில் சிஎஸ்கே... 5 வீரர்கள் இல்லை - என்ன செய்யப்போகிறார் ருதுராஜ்?

அதன்படி நாளைய ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குறைந்தபட்சம் 18 ரன்களுக்கு மேலாக வீழ்த்த வேண்டும், இல்லையென்றால் சேஸிங்கில் 11 பந்துகள் மீதம் இருக்கும் வகையில் வெற்றி இலக்கை எட்டியிருக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை செய்தால் மட்டுமே ஆர்சிபி அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இதனால் இப்போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். பெங்களூரு பேட்டிங்கிற்கு உகந்த மைதானம் என்பதால் ஆர்சிபி அணி டாஸ் வெற்றி பெற்று முதல் பேட்டிங் எடுத்தால், 230 ரன்களுக்கும் மேலாக குவித்து சிஎஸ்கே அணி 210 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் சேஸிங் ஆடலாம் என முடிவெடுத்தால் குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்தி அதனை 18 ஓவர்களில் எட்ட முயற்சிக்க வேண்டும். இது ஆர்சிபி அணியின் கையில் தான் இருக்கிறது.

இதனை தவிர்த்து மற்றொரு பிரச்சனையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இருக்கிறது. அது மழை பிரச்சனை. வானிலை நிலவரப்படி நாளை பெங்களுருவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை போட்டியின் குறுக்கே மழை குறுக்கிடும்பட்சத்தில் அது ஆர்சிபி அணிக்கு பின்னடைவாகவே அமையும். ஏனென்றால் ஓவர்கள் குறைக்கபட்டு டக்வொர்த் லிவீஸ் விதிமுறை கடைபிடிக்கப்படும்போது, வெற்றி இலக்கை மிக மிக சொற்ப பந்துகளில் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆர்சிபி அணி தள்ளப்படும். உதாரணத்துக்கு 18 பந்துகளில் 65 ரன்கள் அல்லது 3.1 ஓவரில் சிஎஸ்கே அணியை ஆல்அவுட் செய்ய வேண்டும் என நிலை வரும். இப்படியான சூழல் ஆர்சிபி அணி பிளே ஆஃப் வாய்ப்பை கனவாக்கிவிடும் என்பதால், நாளைய போட்டியில் மழை குறுக்கிடக்கூடாது என்றே ஆர்சிபி ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு தெரியுமா? சன்பென்ஸ் வைத்த ரோஹித் சர்மா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News