சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி அணிகளை விட... அதிரடி ஆல்-ரவுண்டர்களை கொண்டுள்ள 3 அணிகள் என்ன?
IPL 2025 Mega Auction: 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அதிரடியான ஆல்-ரவுண்டர் படையை வைத்துள்ள 3 அணிகளை இங்கு காணலாம்.
IPL 2025 Mega Auction Latest News Updates: ஐபிஎல் 2025 தொடர் மீது தற்போதே அதிக எதிர்பார்ப்பு எழத்தொடங்கியுள்ளது. வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த நவ.24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இதில் 10 அணிகளும் தங்களுக்கான அணியை கட்டமைத்திருக்கிறது.
அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸில் தோனி - அஸ்வின் - ஜடேஜா ஆகிய பழைய இந்திய கூட்டணி இணைவதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதேபோல், மும்பை அணியும் முன்பை விட தற்போது பந்துவீச்சிலும் வலுவாகி உள்ளது. பும்ரா உடன் தீபக் சஹார் மற்றும் டிரென்ட் போல்ட், சுழற்பந்துவீச்சில் சான்ட்னர் மற்றும் அல்லாஹ் கசன்ஃபர் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். சென்னை, மும்பை அணிகள் பலமானாலே ஐபிஎல் தொடரே பலன் பெற்றுவிட்டது எனலாம்.
இந்த அணிகளும் தலா 5 கோப்பைகளை கையில் வைத்துக்கொண்டு அடுத்த 6வது கோப்பைக்காக காத்திருக்கின்றன. சிஎஸ்கே 2023ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தை வென்றாலும், 2020ஆம் ஆண்டுதான் மும்பை அணி கடைசியாக கோப்பையை வென்றது. சென்னை, மும்பை, ஆர்சிபி அணிகளை விட இந்த மூன்று அணிகளில்தான் சிறந்த ஆல்-ரவுண்டர்கள் ஒன்றுகூடி உள்ளனர். அந்த மூன்று அணிகள் குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிக்க | சிஎஸ்கே, மும்பை இல்லை! பலமான பேட்டிங் ஆர்டர் வைத்திருப்பது இந்த 3 அணிகள் தான்!
குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பல திறன்வாய்ந்த இளம் வீரர்களை அள்ளிப்போட்ட அணி என்றால் அது குஜராத் டைட்டன்ஸ் அணிதான். அனைத்து முக்கிய வீரர்களுக்கும் ஒரு நல்ல வீரரை பேக்-அப்பாக வைக்கும் அளவுக்கு அணி கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அணியின் ஆல்-ரவுண்டர்களை பார்த்தோமானால், ஏற்கெனவே ரஷித் கான், ஷாருக்கான் ஆகியோர் பலம் சேர்க்கும் நிலையில், கிளென் பிளிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், ஜெரால்ட் கோட்ஸி என இந்திய, வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்களை குஜராத் நிரப்பி வைத்திருக்கிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
கடந்த ஐபிஎல் தொடரிலேயே எஸ்ஆர்ஹெச் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது, கோப்பையை தவறவிட்டது. கடந்தாண்டே பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தாலும் சில வீரர்களை விடுவித்ததால் அந்த இடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயத்திற்கு சன்ரைசர்ஸ் தள்ளப்பட்டது. அந்த வகையில் ஏற்கெனவே நிதிஷ் ரெட்டி, பாட் கம்மின்ஸ் ஆகியோர் இருக்க தற்போது ராகுல் சஹார் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகயோரும் அணியில் சேர்ந்துள்ளனர். டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மாவும் ஓரிரண்டு ஓவர்களை வீசுவார்கள் என்பதால் ஆல்-ரவுண்டர்கள் பிரிவு பலம் பெற்றிருக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ்
வெறும் 2 Uncapped வீரர்களுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி மெகா ஏலத்திற்குள் நுழைந்தது. கையில் பெருந்தொகை இருக்க ஷ்ரேயாஸ் ஐயர், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால் ஆகியோரை எடுத்து பர்ஸை பதம் பார்த்துக்கொண்டது. இருப்பினும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் கிளென் மேக்ஸ்வெல், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், மார்கோ யான்சன், ஆரோன் ஹார்டி உள்ளிட்டோரை எடுத்து பஞ்சாப் பலம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் படையை எடுத்துள்ளது.
மேலும் படிக்க | 27 கோடிக்கு ஏலம் போனாலும் ஐபிஎல்லில் அதிக சம்பளம் பெற போவது இவர் தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ