TATA IPL 2024 போட்டிகள் சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் 22.03.2024 & 26.03.2024 ஆகிய நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  இது சம்பந்தமாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விக்டோரியா ஹாஸ்டல் ரோடு (கெனால்ரோடு)


- பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்லலாம். 
- வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை. 


மேலும் படிக்க | Virat Kholi: கிங் என அழைக்க வேண்டாம் - விராட் அன்பான வேண்டுகோள்


பெல்ஸ் சாலை


- பெல்ஸ்சாலை தற்காலிகமாக ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது. பாரதி சாலை x பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம்.
- வாலாஜா சாலை x பெல்ஸ் சாலை சாந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
- கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. நேராக ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.


பாரதி சாலை


- ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதிசாலை X பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம்.
- பாரதி சாலை x பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக வரும் வாகனங்கள் கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.


வாலாஜா சாலை


- M.T.V ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகிசிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம்.
- வாலாஜா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலைக்கு செல்லவதற்கு அனுமதி இல்லை.
- B & R ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக தங்கள் வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.


காமராஜர் சாலை


- காமராஜர் சாலையில் இருந்து வரும் M,T,V ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.
- காமராஜர் சாலையில் இருந்து வரும் B & R ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகிசிலை. பாரதிசாலை, பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று தங்கள் வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.
- உழைப்பாளர் சிலையிலிருந்து வாகனங்கள் வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை.


அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள்


a) அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறசாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.


b) போர் நினைவு சின்னம் வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறசாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.


c) காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறசாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.


மேலும் படிக்க | ஆர்சிபி அணியின் பெயர் அதிரடி மாற்றம்! புது பெயர் என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ