Big Weakness For Shubman Gill: இந்திய கிரிக்கெட் அணி (Team India) அதன் நீண்ட டெஸ்ட் சீசனை எதிர்கொண்டு காத்திருக்கிறது. இந்திய அணி நடப்பு செப்டம்பர் மாதத்தில் வங்கதேச அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளையும் அடுத்த அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நியூசிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகளையும் உள்நாட்டில் விளையாடுகிறது. தொடர்ந்து, நவம்பர் - டிசம்பர் - ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலியா அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா மோதுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த 10 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றி, தோல்விதான் அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதை உறுதிசெய்யும் எனலாம். அந்த வகையில், இந்திய அணி தனது நீண்ட டெஸ்ட் சீசனுக்கான சிறந்த அணியை கட்டமைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. 


இந்திய டெஸ்ட் அணி


ரோஹித் சர்மா தலைமையில் இரண்டாவது முறையாக WTC இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்டோர் பல்வேறு பரிசார்த்த முயற்சியில் இறங்கி உள்ளனர். விராட் கோலி தலைமையில் 2021ஆம் ஆண்டிலும், ரோஹித் தலைமையில் 2023ஆம் ஆண்டிலும் WTC கோப்பை கைநழுவிவிட்டதால், இந்த முறை சிறு தவறு கூட செய்யாமல் இருக்க திட்டமிட்டு வருகிறார்கள். 


முதற்கட்டமாக, வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான (IND vs BAN Test Series) இந்திய அணியை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். துலீப் டிராபியின் முதல் சுற்று போட்டிகள் நிறைவடைந்த உடனேயே இந்திய அணி அறிவிக்கப்படலாம். அப்படியிருக்க இப்போதைக்கு இந்திய அணியில் முக்கால்வாசி இடங்கள் உறுதியாகிவிட்டது. சில இடங்கள் மட்டுமே காலியாக யாரை நிரப்புவது என்ற கேள்வியுடன் உள்ளது.


மேலும் படிக்க | துலீப் டிராபி : சதமடித்த தம்பி, ஆனந்த கண்ணீரோடு குதித்து கொண்டாடிய சர்பிராஸ் கான்


புஜாரா இடத்திற்கு சுப்மான் கில்


ரோஹித் கேப்டன்ஸி கோட்டாவிலும், விராட் கோலி சீனியர் கோட்டாவிலும் இந்திய அணியில் இடம்பெறுவது உறுதி. பும்ரா, ஷமி ஆகியோருக்கு இந்த டெஸ்ட் தொடரில் இடம்பெறமாட்டார்கள். எனவே, சிராஜ் பந்துவீச்சை தலைமை தாங்குவார். அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் நிச்சயம் ஸ்குவாடில் இருப்பார்கள். சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பதும் ஏறத்தாழ உறுதியாகி உள்ளது. அதிரடி ஓப்பனராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருக்க மற்ற இடங்களில் பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றன. 


பேட்டிங் ஆர்டரில் மூன்றாவது இடத்தில் கம்பீர் - அகர்கர் இணையால் ஆல் பார்மட் பிளேயராக பார்க்கப்படும் சுப்மான் கில்லுக்குதான் (Shubman Gill) அதிக வாய்ப்பிருக்கிறது. அவர் டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், அவருக்கு வங்கதேச தொடரில் நிச்சயம் ஒருமுறை வாய்ப்பளிப்பார்கள். புஜாராவுக்கு பதில் சுப்மான் கில்லை அந்த இடத்தில் நிரப்ப இந்திய அணி திட்டமிடுகிறது. ஆனால், அவர் புஜாரா போல் பெரியளவில் தடுப்பாட்ட திறன்மின்மையால் தவிக்கிறார் எனலாம். 


அவுட்டான சுப்மான் கில்


துலீப் டிராபி தொடரில் (Duleep Trophy 2024) பெங்களூருவில் India A - India B அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது. இதில் India A அணிக்கு சுப்மான் கில் கேப்டனாக உள்ளார். இரண்டாவது நாளான இன்று India B 321 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதை தொடர்ந்து, India A பேட்டிங்கை தொடங்கியது. மயங்க் அகர்வால் - சுப்மான் கில் ஆகியோர் ஓப்பனிங்கில் இறங்கினர். 



அதில், நவ்தீப் சைனி வீசிய அவுட்சைட் ஆப் லைனில் வந்த Inswing டெலிவரியை ஆடாமல் கில் விடமுயன்றார். ஆனால், அந்த பந்து உடனே உள்ள வந்து ஆப்-ஸ்டம்பை பதம்பார்த்தது. அதாவது, கடந்த 2023 WTC இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாம் போலாண்ட் பந்துவீச்சில் அவுட்டாகியது போலவே கில் இன்றும் ஆட்டமிழந்தார். அதாவது அவரது பலவீனம் இன்றும் தொடர்கிறது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 


சுப்மான் கில்லின் பலவீனம்


சுப்மான் கில் தனது தடுப்பாட்டத்தில் தற்போது அதிகம் கவனம் செலுத்தியிருப்பதாக கூறினார். கில் இன்றும் கூட நல்ல ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார். நல்ல ஆப்-டிரைவ் ஷாட்களையும் ஆடினார். 43 பந்துகளில் 25 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார் கில். அந்த ஒரு பாலை தவறாக கணித்ததில் அவ்வளவு நேரமாக அவர் கடினமாக விளையாடியது வீணானது.



Incoming டெலிவரிகளில் இவருக்கு இருக்கும் பிரச்னையை சீர்செய்யாவிட்டால் வெளிநாட்டில் இல்லை, உள்நாட்டிலேயே இவர் சோபிப்பது கேள்விக்குறியாகிவிடும். புஜாரா இடத்தில் கில்லை நிரப்ப வேண்டும் என்றால் களத்தில் நிறைய நேரம் செலவிடக்கூடிய திறனை அவர் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.


மேலும் படிக்க | இனி இவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கஷ்டம்தான்... முதல் நாளிலேயே மெகா சொதப்பல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ