Duleep Trophy 2024: துலீப் டிராபி 2024 தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. India A, India B, India C, India D ஆகிய நான்கு அணிகள் மோதும் இந்த தொடரில் மொத்தம் 6 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஒவ்வொரு அணியும் பிற அணிகளுடன் தலா 1 போட்டியில் மோதும். இந்த தொடர் மூன்று சுற்றுகளாக நடைபெறுகிறது. அந்த வகையில், India A - India B அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூருவிலும், India C - India D அணிகளுக்கு இடையிலான போட்டி அனந்தபூரிலும் நடைபெற்றன.
India A vs India B
பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற India A அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர். இன்றைய ஆட்ட நேர முடிவில் India B அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை எடுத்தது. அதில், அதிகபட்சமாக முஷீர் கான் 105 ரன்களை எடுத்து இன்னும் ஆட்டமிழக்காமல் உள்ளார். நவ்தீப் சைனி 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். India A அணி தரப்பில் கலீல் அகமது, ஆகாஷ் தீப், ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
India C vs India D
அதேபோல், India C - India D அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற India C அணி முதலில் பந்துவீசியது. இதில் India D அணி 164 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 86 ரன்களை அடித்தார். India D தரப்பில் விஜய்குமார் வைஷாக் 3 விக்கெட்டுகளையும், அன்சுல் கம்போஜ், ஹிமான்சு சௌகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மானவ் சுதர், ஹிருத்திக் சோகீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
மேலும் படிக்க | துலீப் டிராபி போட்டி அட்டவணை - எந்தெந்த அணிகள் எப்போது விளையாடும்? முழு விவரம்
இதை தொடர்ந்து, பேட்டிங் செய்த Team C அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்களை எடுத்துள்ளது. தற்போது நிலையில் 73 ரன்கள் பின்தங்கி உள்ளது. அந்த அணியில் பாபா இந்திரஜித் 15 ரன்களுடனும், அபிஷேக் போரேல் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். Team D தரப்பில் ஹர்ஷித் ராணா, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஏமாற்றம் அளித்த வீரர்கள்
Team B பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெரிய ஸ்கோரை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 30 ரன்களை அடித்து ஏமாற்றமளித்தார். சர்ஃபராஸ் கான் 9, ரிஷப் பண்ட் 7, நிதிஷ் ரெட்டி 0, வாஷிங்டன் சுந்தர் 0 ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
அதேபோல் Team Dஇல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் 9, தேவ்தத் படிக்கல் 0, ஷிகர் பரத் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதேபோல் Team Cஇல் ருதுராஜ் கெய்க்வாட் 5, சாய் சுதர்சன் 7, ரஜத் பட்டிதர் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். முதல் சுற்றின் முடிவிலேயே வங்கதேசம் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்க உள்ளதால் இன்று ஏமாற்றம் அளித்த வீரர்களுக்கான வாய்ப்பு சற்று மங்கியுள்ளதாகவே கூற வேண்டும்.
மேலும் படிக்க | Duleep Trophy: துலிப் டிராபி போட்டிகளை நேரலையில் எங்கு, எப்போது பார்க்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ