IND vs AUS: பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளை இந்தியா வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வென்ற இந்தியா அணி, ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்த நிலையில், முதல் இன்னிங்ஸில் இந்தியா 109 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. மேத்யூ குஹ்னேமன் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து, விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜா சிறப்பான அரைசதத்தை பதிவு செய்தார். இருப்பினும், அந்த அணி 197 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி 88 ரன்கள் முன்னிலை பெற்றது. 


மேலும் படிக்க | பென் ஸ்டோக்ஸை அனுப்பி வைக்கிறோம், ஆனால் சிஎஸ்கேவுக்கு ஒரு கண்டிஷன்; பிரெண்டன் மெக்கலம்


இதையடுத்து, நேற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் புஜாரா மட்டும் நிலைநின்று ஆடி, அரைசதம் அடித்தார். பிற பேட்டர்கள் வழக்கம்போல் சொதப்ப, 163 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயான் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார். ஆஸ்திரேலிய அணிக்கு வெறும் 76 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 



மூன்றாவது நாளான இன்று, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. கவாஜா முதல் ஓவரிலேயே அஸ்வின் பந்துவீச்சில் டக்-அவுட்டானார். தொடக்க விக்கெட்டை இழந்தாலும், அடுத்த வந்த லபுஷேன் உடன் டிராவிஸ் ஹெட்டும் நிதானம் காட்டி, இலக்கை எட்ட துணை நின்றார். அந்த அணி 18.5 ஓவர்களில் 78 ரன்களை அடித்து, ஆட்டத்தை வென்றது. இதன்மூலம், நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-2 என்று தனது கணக்கை தொடங்கியுள்ளது. 



இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும், இந்தியாவின் இறுதிப்போட்டி கனவு சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. அடுத்து, மார்ச் 9ஆம் தேதி, அகமதாபாத் நகரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியை வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பிருக்கும். ரோஹித் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவின் சுழல் கூட்டணியில் தடுமாறியது பெரும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. ஆட்ட நாயகனாக நாதன் லயான் தேர்வு செய்யப்பட்டார். 


மேலும் படிக்க | தோனி போல் செயல்படமாட்டேன் - ஆர்சிபி கேப்டன் டூபிளசிஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ