Football legend Pele passed away : பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரும், மூன்று முறை கால்பந்து உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணியின் நட்சத்திர வீரருமான பீலே, புற்றுநோயால் நீண்ட நாள்களாக பாதிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 29ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச. 29) உயிரிழந்தார் என அவரின் குடும்பத்தினரும், ஏஜென்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர், பீலேவின் மகளான கெலி நாசிமெண்டோ தனது இன்ஸ்டாகிராமில், படுக்கையில் படுத்திருக்கும் பீலேவின் கையை பிடித்தபடி நிற்கும் குடும்பத்தினரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். "நாங்கள் என்னவாக இருக்கிறோமோ அனைத்திற்கும் உங்களுக்கு நன்றி. உங்களை அளவில்லாமல் நேசித்தோம். உங்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 


பீலே மறைவுக்கு பின்னர் அவரது மகள் பகிர்ந்த புகைப்படம்:



எட்சன் அரான்டெஸ் நாசிமெண்டோ என்ற இயற்பெயர் கொண்ட பீலேவுக்கு வயது 82. செப்டம்பர் 2021ஆம் தேதி, அவரின் பெருங்குடலில் இருந்து புற்றுநோய் கட்டி  ஒன்று அகற்றப்பட்டது. இருப்பினும், அவருக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. 


மேலும் படிக்க | FIFA World Cup Final 2022: முதல் உலகக்கோப்பையை முத்தமிட்டார் மெஸ்ஸி... அர்ஜென்டினா சாம்பியன்


புற்றுநோய் பாதிப்பு


அந்த வகையில், கடந்த நவம்பர் 29ஆம் தேதி அவர், பிரேசிலின் ஸா பாலோ நகரில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் புற்றுநோய் உள்பட பல நோய் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவரின் பெருங்குடலில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டி தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருவதாகவும், அவரின் சிறுநீரகம் மற்றும் இதயம் செயலிழப்பு சிகிச்சை இன்னும் கூடுதல் சிகிச்சை தேவை எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.  


கால்பந்தாட்டத்தில் ஜாம்பவானாக திகழ்ந்து பல்வேறு சாதனைகளை படைத்த பீலே, 1958, 1962, 1970 ஆகிய தொடர்புகளிலும் பிரேசில் அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். பீலே மொத்தம் 92 போட்டிகளில் விளையாடி 77 கோல்களை அடித்தது மட்டுமின்றி, தற்போது வரை பிரேசிலின் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பீலே தக்கவைத்துள்ளார்.


உலகக்கோப்பை நாயகர்களுக்கு பாராட்டு


சமீபத்தில் கத்தார் நாட்டில் நடந்து முடிந்த பிபா உலகக்கோப்பை தொடரை அர்ஜென்டீனா அணி வென்றிருந்த நிலையில், பீலே தனது சமூக வலைதளப் பக்கத்தில், சாம்பியன் அணியை புகழ்ந்து பதிவிட்டிருந்தார். மேலும், அர்ஜென்டீனா கோப்பையை வெல்ல உதவிகரமாக இருந்து, தனது உலகக்கோப்பை கனவை தீர்த்த லியோனல் மெஸ்ஸியையும், இறுதிப்போட்டி வரை முன்னேறிய பிரான்ஸ் அணியின் கைலன் இம்பாப்பேயையும், அரையிறுதியில் ஆச்சரியமளிக்கும் வகையில் செயல்பட்ட மொராக்கோ அணியையும் பீலே தனது பதிவில் பாராட்டியிருந்தார். 



உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வந்தபோதே அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிரேசில் அணி வீரர்களும், கத்தாரில் இருந்த ரசிகர்களும் சேர்ந்தும், பீலே உடல்நலன் பெற வேண்டும் என மைதானத்தில் பேனரை சுமந்து தங்களின் ஆறுதலை தெரிவித்தனர்.


தற்போது ஜாம்பவான் பீலே உயிரிழந்ததை அடுத்து, உலகமெங்கும் இருந்து ரசிகர்கள் அவரின் குடும்பத்தினருக்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | FIFA World Cup Final 2022: கால்பந்து உலகக் கோப்பை தோல்வியால் பிரான்சில் வெடித்த கலவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ