FIFA World Cup Final 2022: கால்பந்து உலகக் கோப்பை தோல்வியால் பிரான்சில் வெடித்த கலவரம்

Argentina vs France World Cup Riots: உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு பிரான்சில் கலவரம் வெடித்தது, போராட்டக்காரர்கள் வாகனங்களை எரித்து அதிருப்தியை வெளிப்படுத்தினர்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 19, 2022, 10:09 AM IST
  • உலகக் கோப்பை தோல்வியால் பிரான்சில் கலவரம்
  • போராட்டக்காரர்கள் வாகனங்களை எரித்து அட்டகாசம்
  • கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் குவிப்பு
FIFA World Cup Final 2022: கால்பந்து உலகக் கோப்பை தோல்வியால் பிரான்சில் வெடித்த கலவரம் title=

France Vs Argentina: கால்பந்தாட்டத்தின் மன்னனாக அர்ஜென்டினா உருவெடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட்டில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்த பிறகு, பிரான்சில் கலவரம் வெடித்தது. 

 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண பிரான்சின் பல்வேறு நகரங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் பார்களில் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் திரண்டனர். இருப்பினும், பாரிஸ் உட்பட பல நகரங்கள் போட்டியை பெரிய திரையில் ஒளிபரப்ப மறுத்தன. கால்பந்து உலகின் புதிய சக்கரவர்த்தி பிரான்ஸ்தான் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், போட்டியில் பிரான்சு அணி உலகக் கோப்பையை அர்ஜென்டீனா அணியிடம் தோற்றதை அடுத்து கோபமடைந்த ரசிகர்கள் சீற்றத்தை வன்முறையாக வெளிப்படுத்தினார்கள்.

இப்படி ஏதேனும் வெறிச்செயல்கள் நடக்கும் வாய்ப்புகளை கவனத்தில் கொண்டே, பாரிஸ் உட்பட பல நகரங்கள் போட்டியை பெரிய திரையில் ஒளிபரப்ப மறுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்விக்குப் பிறகு பிரான்சில் கலவரம் வெடித்த நிலையில், போராட்டக்காரர்கள் வாகனங்களை எரித்தும், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்கள். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி வாகனங்களுக்கு தீ வைத்ததுடன், அதிரடிப்படையினருடன் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

பாரீஸ், லியோன் மற்றும் நைஸ் போன்ற நகரங்களில் கால்பந்து ரசிகர்கள் கொந்தளித்தனர். போராட்டக்காரர்களுக்கும், கலகத் தடுப்பு போலீஸாருக்கும் இடையில் மோதல் ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க | CM Stalin: ஃபீபா உலகக்கோப்பை மகுடம் சூடிய அணிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நேற்றைய உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில்,  பிரான்ஸ் அணிக்கும், மெஸ்ஸியின் அர்ஜெண்டீனா அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இறுதியில், பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவிடம் தோற்றது. இதை ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்கள் பொறுமை இழந்து பல நகரங்களில் கலவரம் போன்ற சூழலை உருவாக்கிவிட்டனர்.

மேலும் படிக்க | Mrs World: மிஸஸ் வோர்ல்ட் பட்டம் வென்றார் இந்தியா! மகுடம் சூடிய அழகி சர்கம் கெளஷல்

பாரிஸ் மற்றும் லியோன் நகரத் தெருக்களில் நடந்த ரசிகர்களின் சீற்றமான ரகளையின் வீடியோக்கள், பல சமூக ஊடகங்களில் வைரலாகிறது. 

வைரலாகும் வீடியோக்களில், கண்ணீர் புகை குண்டுகளை கண்டு மக்கள் ஓடுவதை காணமுடிகிறது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தண்ணீர் பீரங்கிகளையும் பிரயோகித்தது வீடியோக்கலில் தெரிகிறது. லியோன் நகரில் டஜன் கணக்கான போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

மேலும் படிக்க | FIFA World Cup 2022 Awards : முக்கிய விருதுகளை வென்றது யார்... யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News