விளையாட்டு வீராங்கனையில் போதைப்பொருள் கடத்தல்: அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் பிரிட்னி கிரைனர் வேடுமென்றே போதைப்பொருளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 31 வயதான கூடைப்பந்தாட்ட வீராங்கனை பிரிட்னி கிரைனர், ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டவிரோதமானது என்று தெரிந்தபோதிலும், கஞ்சா கலந்த பொருட்களை ரஷ்யாவிற்குள் வேண்டுமென்றே கொண்டு வந்ததற்காக ரஷ்ய நீதிமன்றம் பிரிட்னி கிரைனரை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது. ரஷ்ய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வியாழனன்று (2022, ஆகஸ்ட் 4) வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யா சென்றிந்த பிரிட்னியிடம் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக அந்நாட்டு அதிகாரிகள், கூடைப்பந்து நட்சத்திரம் பிரிட்னியை கைது செய்தனர்.


மேலும் படிக்க | 9 ஆண்டுகளுக்கு பிறகு தாயை சந்தித்த பிரபல வீரர்! வைரலாகும் புகைப்படம்!


தற்போது வழக்கு விசாரணைக்கு பிறகு, பிரிட்னி கிரைனருக்கு 9 ஆண்டுகள் சிறைதண்டனையனையும் ஒரு மில்லியன் ரூபிள் தொகை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு சர்வதேச அளவில் கடுமையான விவாதங்களை எழுப்பியிருக்கிறது.


உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் எதிரொலியாக, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், விளையாட்டு வீராங்கனை பிரிட்னி கிரைனர் விவகாரத்தை பகடைக்காயாக ரஷ்யா பயன்படுத்துவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளது.



ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் கைதிகள் பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும் தீர்ப்பு
அமெரிக்க விளையாட்டு வீராங்கனைக்கு விதிக்கப்பட்ட தண்டனை, ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் கைதிகளை மாற்றுவதற்கு வழிவகுக்கலாம்,  ஒரு காலத்தில் ஆயுத வியாபாரியாக இருந்த சிறையில் அடைக்கப்பட்ட ஒரு ரஷ்யரும் அடங்குவர். எவ்வாறாயினும், 'நியாயமற்ற' தீர்ப்பை மேல்முறையீடு செய்யப்போவதாக பிரிட்னி கிரைனரின் பாதுகாப்புக் குழு தெளிவுபடுத்தியுள்ளது.


மேலும் படிக்க | CWG 2022: காமன்வெல்த் போட்டிகளில் கலந்துக் கொள்ளும் இந்திய விளையாட்டு வீரர்கள்


பிப்ரவரி 17 அன்று மாஸ்கோவின் ஷெரெமெட்டியோ விமான நிலையத்தில் பிரிட்னி க்ரைனர் கொண்டு வந்த பொருட்களில் ஹாஷிஷ் எண்ணெய் கொண்ட வேப் கேட்ரிட்ஜ்கள் இருந்ததாக கூறி அவர் தடுத்து வைக்கப்பட்டார். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார், ஆனால் தடை செய்யப்பட்ட பொருளை ரஷ்யாவிற்கு கொண்டு வரவோ அல்லது யாரையும் காயப்படுத்தவோ விரும்பவில்லை என்று கூறினார்.


"நான் ஒரு நேர்மையான தவறு செய்தேன், உங்கள் தீர்ப்பு, என் வாழ்க்கையை இங்கேயே முடித்துவிடாது என்று நம்புகிறேன்," என்று கிரைனர் நீதிமன்றத்தில் கண்ணீருடன் தெரிவித்தார். "எனது பெற்றோர் எனக்கு இரண்டு முக்கியமான விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்: ஒன்று, உங்கள் பொறுப்புகளை உரிமையாக்கிக் கொள்ளுங்கள், இரண்டு, உங்களிடம் உள்ள அனைத்திற்கும் கடினமாக உழைக்க வேண்டும். அதனால்தான் நான் தவறு செய்த குற்றவாளி என்று ஒப்புக்கொண்டேன்" என்று பிரிட்னி தெரிவித்தார்.


மேலும் படிக்க | 12 பதக்கங்களுடன் காமன்வெல்த் போட்டிகளில் 6வது இடத்தை பிடித்த இந்தியா


விசாரணை தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
"ரஷ்யா பிரிட்னியை காவலில் வைத்துள்ளது  ஏற்றுக்கொள்ள முடியாதது, உடனடியாக அவரை விடுவிக்குமாறு ரஷ்யாவை நான் கேட்டுக்கொள்கிறேன். பிரிட்னியை, அவரது மனைவி, அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் அணியினருடன் இருக்க விடுங்கள்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


பிரிட்னி கிரைனர் சாதனைகள்
பிரிட்னி கிரைனர் 2,000 புள்ளிகள் மற்றும் 500 ஷாட்களைத் தடுத்த ஒரே NCAA கூடைப்பந்து வீரராக இருக்கிறார். இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பிரிட்னி, மூன்று முறை ஆல்-அமெரிக்கன் AP பிளேயர் ஆஃப் தி இயர் மற்றும் 2012 ஆம் ஆண்டில் இறுதி நான்கில் மிகச் சிறந்த வீராங்கனை என்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.


31 வயதான கூடைப்பந்தாட்ட வீராங்கனை பிரிட்னி, ஒலிம்பிக் தங்கப் பதக்கம், NCAA சாம்பியன்ஷிப், FIBA ​​உலகக் கோப்பை தங்கப் பதக்கம் மற்றும் WNBA சாம்பியன்ஷிப்பைப் பெற்ற 11 பெண்களில் ஒருவர். ஒட்டுமொத்தமாக, அவர் இரண்டு தங்க ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 


மேலும் படிக்க | அசத்தும் செஸ் ஒலிம்பியாட்! அதிவேக 5ஜி இன்டர்நெட், 2000 சிம்கார்டுகள் தயார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ