அசத்தும் செஸ் ஒலிம்பியாட்! அதிவேக 5ஜி இன்டர்நெட், 2000 சிம்கார்டுகள் தயார்

Amazing Chess Olympiad: வெளிநாட்டு வீரர்களுக்காக அதிவேக 5ஜி இன்டர்நெட், 2000 சிம்கார்டுகள் தயார் என தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் தகவல்

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 26, 2022, 05:14 PM IST
  • தமிழ்நாடு அரசு மற்றும் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு இணைந்து நடத்தும் 44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
  • இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்த போது இளைஞர் நலன் மற்றும் சதுரங்க ஒலிம்பியாட் திட்டத்திற்கு அதிக அளவில் ஒதுக்கப்பட்டது.
  • சதுரங்க விளையாட்டிற்கு உலகில் மிகவும் புகழ்பெற்ற போட்டி சதுரங்க ஒலிம்பியாட் ஆகும்.
அசத்தும் செஸ் ஒலிம்பியாட்! அதிவேக 5ஜி இன்டர்நெட், 2000 சிம்கார்டுகள் தயார் title=

44th Chess Olympiad in Chennai: சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது வருகின்ற 29-ஆம் தேதி துவங்கி , ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது. இதற்கான முன் ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்ததை ஒட்டி தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். இறுதி கட்டமாக நடைபெறும் ஒரு சில பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். 

இதனை அடுத்து செய்தியாளரை சந்தித்த அமைச்சர் மெய்ய நாதன் கூறுகையில், "செஸ் போட்டிக்காக அரங்குகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இதுவரை சுமார் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இன்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்களுக்காக அனைத்து விதமான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்களுக்கு தேவையான சிம்கார்டுகளை, போட்டி நடைபெறும் இடத்திலே, முகாம் அமைக்கப்பட்டு சிம்கார்டுகள் தேவைப்படுவோர்களுக்கு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதற்காக சுமார் 2000 சிம் கார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அரங்கம் முழுவதும் அதிவேக 5ஜி இன்டர்நெட் சேவையும் கொடுக்கப்பட உள்ளது என தெரிவித்தார். இதே போல நாளை மாலை ஒலிம்பியாட் சுடரானது இந்தியா முழுவதும் உள்ள 75 முக்கிய நகரங்களுக்கு சென்று விட்டு, மாமல்லபுரம் வரவுள்ளது. ஒலிம்பியாட் சுடருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் தெரிவித்தார்.

மேலும் படிக்க : 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி : தமிழகத்திற்கு பெருமை..!

ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், "44வது செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடப்பது பெருமையளிப்பதாக தெரிவித்திருந்தார். உலகின் தலை சிறந்த செஸ் விளையாட்டு வீரர்களை தமிழ்நாடு உருவாக்கி வருகிறது என குறிப்பிட்ட அவர், தமிழக அரசு உலக செஸ் போட்டியை சிறப்பாக நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்த போது இளைஞர் நலன் மற்றும் சதுரங்க ஒலிம்பியாட் திட்டத்திற்கு அதிக அளவில் ஒதுக்கப்பட்டது. சதுரங்க விளையாட்டிற்கு உலகில் மிகவும் புகழ்பெற்ற போட்டி சதுரங்க ஒலிம்பியாட் (Chess Olympiad) ஆகும். பொதுவாக, இந்த போட்டியை நடத்துவதற்கு நாடுகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை, இந்த போட்டியை நடத்த இந்தியாவிற்கு வாய்ப்பு எட்டவில்லை. இவ்வாண்டு, இந்த திமுக அரசின் சீரிய முயற்சிகளின் பயனாக முதன்முறையாக சதுரங்க ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 293.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார் என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.

தமிழ்நாடு அரசு மற்றும் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு இணைந்து நடத்தும் 44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க: வருக வருக தமிழ்நாட்டுக்கு வருக - செஸ் ஒலிம்பியாட் பாடல் வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News