இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல்அவுட்டான நிலையில், தென்னாப்பிரிக்கா அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 13 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 10 ரன்களிலும், மயங்க் அகர்வால் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். களத்தில் புஜாராவும், கேப்டன் கோலியும் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்யும்போது பும்ராவுக்கும், தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் ஜேன்சனுக்கும் உரசல் ஏற்பட்டது.


ALSO READ | IND vs SA: இந்திய அணியில் இரண்டு முக்கிய வீரர்கள் நீக்கம்! காரணம் என்ன?


பும்ரா பேட்டிங் செய்யும்போது பந்துவீசிய ஜேன்சன், பவுன்சராக வீசி அச்சுறுத்தியதுடன், முறைத்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இதில் கடுப்பான பும்ரா, ஜேன்சன் வீசிய பந்து ஒன்றை சிக்சருக்கு விளாசி அமர்களப்படுத்தினார். அத்துடன் அவருடைய பதிலடி நிற்கவில்லை. தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் ஆடியபோது, களம் புகுந்த ஜேன்சனுக்கு பும்ரா தாறுமாறாக பந்துவீசினார். வேகமாக வந்த ஒரு பந்தை எதிர்கொள்ள முடியாத ஜேன்சன், முதுகில் அடிவாங்கினார். 



மேலும், தொடர்ந்து பவுன்சர் பந்தாக ஜேன்சனுக்கு வீசி மிரட்டிய பும்ரா, கடைசியாக ஸ்டம்பை தெறிக்கவிட்டு அவரை ஆட்டமிழக்க செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. மற்ற வீரர்களுக்கு சராசரியாக 132 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசிய பும்ரா, ஜேன்சனுக்கு மட்டும் 142 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசினார். இந்த வேகத்தை குறிப்பிட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்க்கஸ் ஸ்டொயினஸ், ’ஏன் இந்த கொலவெறி?’ பும்ரா என கிண்டலாக கேட்டுள்ளார். இதனிடையே, 3வது நாள் ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெற உள்ளது. கோலி இன்னும் 53 ரன்கள் எடுத்தால் 8 ஆயிரம் ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் இணைய உள்ளார். 


ALSO READ | IPL2022; வெளிநாட்டில் இந்த ஆண்டு ஐ.பி.எல்..! Plan B-ல் UAE இல்லை..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR