6 மாதங்களுக்கு முன்பு கேலி செய்த ஷோயப் அக்தர்... தரமான பதிலடி கொடுத்த ஜஸ்பிரித் பும்ரா
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் 6 மாதங்களுக்கு முன்பு கேலி செய்த நிலையில் அவருக்கு இப்போது தரமான பதிலடி கொடுத்திருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்துவீசினார். இந்திய அணிக்காக இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து பும்ரா மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் இங்கிலாந்துக்கு எதிராக ஜஸ்பிரித் பும்ரா தனது சிறப்பான பந்துவீச்சால் ஆதிக்கம் செலுத்தினார். காயம் காரணமாக அவர் சர்வதேச கிரிக்கெட் விளையாடாதபோது, பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவை நோக்கி பயணிப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறியிருந்தனர். அதில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தரும் ஒருவர். அவர்களுக்கு எல்லாம் தன்னுடைய பந்துவீச்சு மூலம் பதில் கொடுத்திருக்கிறார் பும்ரா.
மேலும் படிக்க | IND vs ENG: இந்தியாவை விட்டு வெளியேறும் இங்கிலாந்து அணி...! இந்த திடீர் முடிவு ஏன்?
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பும்ரா காயமடைந்தபோது யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சோயிப் அக்தர், பும்ராவின் அதிரடியான பந்துவீச்சு நீண்ட காலம் நீடிக்காது என்று கூறியிருந்தார். பும்ராவின் உடல் மற்றும் வேகம், அடிக்கடி காயமடைவதையெல்லாம் பார்க்கும்போது, என்னுடைய கணிப்பு சரியாக இருக்கும் என உறுதியாக நம்புவதாகவும் அக்தர் தெரிவித்திருந்தார். அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார். அதாவது, ஒருமுறை அதிரடி பந்துவீச்சாளர்களுக்கு முதுகில் காயம் ஏற்பட்டால், அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், அவர்களால் முன்பு போல் பந்து வீச முடியாது என தெரிவித்தார்.
ஆனால் பும்ராவின் கம்பேக் பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து தொடரில் இருந்தது. அவர் பந்துவீசிய விதம், விக்கெட் எடுத்ததையெல்லாம் பார்க்கும்போது சோயிப் அக்தர் விமர்சனதுக்கு எல்லாம் பதிலடி கொடுப்பது போலவே இருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில், டெஸ்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் ஜஸ்பிரித் பும்ரா.
மேலும் படிக்க | IND vs ENG: மைதானத்திற்கே வந்த இந்திய தேர்வு குழு! இந்த வீரர்களுக்கு இனி இடமில்லை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ