17.50 கோடிகளை கொட்டி மும்பை இந்தியன்ஸ் தூக்கிய கேம்ரூன் கிரீன்! யார் இவர்?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேம்ரூன் கிரீன் 17.50 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக உள்ளார் அவர்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த முறை சோபிக்கவில்லை. மிக மோசமான தோல்விகளை சந்தித்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. ஆனால், இந்தமுறை பழைய சாம்பியனாக திரும்பி வர வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது. அதனை அந்த அணி ஏலத்தில் டார்கெட் செய்த பிளேயர்களை வைத்தே கூறலாம். அதிரடி மன்னர்கள் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்கள் ஆகியோர் ஏலத்துக்கு வரும்போதெல்லாம் முட்டி மோதினர். இதில் ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் கேம்ரூன் கிரீனை 17.50 கோடிகள் கொட்டிக் கொடுத்து தூக்கியது.
மேலும் படிக்க | IPL Mini Auction 2023: சாம்கரண் காட்டில் பண மழை! ஐபில் வரலாற்றில் புது உச்சம்
அவர் பெயர் முதலில் ஏலத்துக்கு வந்தபோது ஆர்சிபி அணி ஆர்வம் காட்டியது. ஆனால் மும்பை தொடக்கம் முதலே கேம்ரூன் கிரீனை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. ஆர்சிபி அணி 7 கோடி வரை மோதிப் பார்த்தது. அதன்பிறகு விலகிக் கொண்டது. அடுத்ததாக டெல்லி கேப்பிட்டல்ஸ் ரேஸில் குதித்தது. அந்த அணி 10 கோடி வரை மோதியது. ஆனால் மும்பை விட்டுக் கொடுப்பதாக இல்லை. ஏலத்தில் போட்டி அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில், இறுதியாக 17.50 கோடிக்கு ஏலம் எடுத்தது.
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 2வது வீரர் என்ற சிறப்பை பெற்றார் கேம்ரூன் கிரீன். முதல் இடத்தில் சாம் கரண் இருக்கிறார். அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 18.50 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவருக்கு அடுத்த இடத்தில் கேம்ரூன் கிரீன் இருக்கிறார். பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்தில் கிங் மேக்கர் இவர் தான்!... என்ன செய்யப்போகிறார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ