இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 198 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 212 ரன்கள் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் சிறப்பாக விளையாடி சதமடித்ததுடன், தனி ஒருவராக இந்திய அணி கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | INDvsSA: முறைத்த ஜேன்சன்.. ஸ்டம்பை பறக்கவிட்ட பும்ரா..! Video


இதனையடுத்து, இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய டீன் எல்கர் சொற்ப ரன்களில் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் கூட்டணி அமைத்த பீட்டர்சன் மற்றும் டீன் எல்கர் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களின் விக்கெட்டை எடுக்க இந்திய வீரர்கள் கடுமையாக போராடினர். அப்போது, அஸ்வின் பந்துவீச்சில் டீன் எல்கர் எல்.பி.டபள்யூ ஆனார்.



கள நடுவர் அவுட் கொடுக்க, டீன் எல்கர் இதனை எதிர்த்து அப்பீல் செய்தார். தொலைக்காட்சி ரிப்ளேவில் பந்து தெளிவாக இன்சைட் பிட்ச் ஆனபோதும், ஸ்டம்பை தாக்காமல் மேலே செல்வதுபோன்று கிராபிக்ஸ் காண்பித்தது. இது கள நடுவர் மற்றும் இந்திய வீரர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. களநடுவர் எராஸ்மஸ் (Erasmus) "that is impossible" எனக் கூறினார். விராட் நேரடியாக ஸ்டம்ப் மைக்கில் சென்று தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். உங்கள் அணி மீது கவனம் செலுத்துங்கள், எதிரணி மீது வேண்டாம் என கடுமையாக கூறினார். 



இதேபோல், துணைக் கேப்டன் கே.எல். ராகுல் ’11 பேருக்கு எதிராக ஒட்டுமொத்த நாடே செயல்படுகிறது’ என விமர்சித்தார். இதேபோல் அஸ்வின், மயங்க் அகர்வால் உள்ளிட்டோரும் தங்களின் அதிருப்தியை வெளிக்காட்டினர். இந்த விஷயம் பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில், கவுதம் காம்பீர் விராட் கோலியை விமர்சித்துள்ளார். அவர் களத்தில் நடந்து கொண்ட விதம் முதிர்ச்சியின்மையைக் காட்டுவதாக சாடியுள்ளார்.


ALSO READ | சாதனைகளுக்கு மேல் சாதனை படைக்கும் ரிஷப் பண்ட்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR