இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் கோலியின் சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணி 223 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. விராட் கோலி சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் 79 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ALSO READ | IND vs SA: இந்திய அணியில் இரண்டு முக்கிய வீரர்கள் நீக்கம்! காரணம் என்ன?
இதனையடுத்து முதல் இன்னிங்சில் களம் பெரிய சவுத் ஆப்பிரிக்கா அணி 210 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. பும்ராவின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் சவுத் ஆப்பிரிக்கா பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பும்ரா. 13 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி இரண்டாம் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்றைய நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
India bowl S Africa out for 210 to take narrow first innings lead https://t.co/BUYvKmfWwh pic.twitter.com/GVlBs2THU6
— Reuters Asia (@ReutersAsia) January 12, 2022
இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் காலை முதலே இந்திய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கேப்டன் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இணைந்து அணியை மீட்டனர். 143 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து கோலி ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் சதமடித்தார். ஆசிய நாடுகளில் ஒரு விக்கெட் கீப்பர் தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் அடிப்பது இதுவே முதல் முறை. ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் சதமடித்து அசத்தியிருந்தார் ரிஷப் பண்ட்.
That will be Tea on Day 3 of the 3rd Test.@RishabhPant17 brings up a fantastic ton as #TeamIndia post a total of 198 in the second innings.
Over to the bowlers now.
Scorecard - https://t.co/yUd0D0YyB7 #SAvIND pic.twitter.com/aegWfv554C
— BCCI (@BCCI) January 13, 2022
இரண்டாம் இன்னிங்சில் 198 ரன்னில் இந்தியா அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. 211 ரன்களை தென் ஆப்பிரிக்க அணிக்கு இலக்காக வைத்து உள்ளது இந்தியா. இந்த போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லலாம் என்ற நிலையில் இரு அணிகளும் விளையாடி வருகின்றனர்.
ALSO READ | IPL2022; வெளிநாட்டில் இந்த ஆண்டு ஐ.பி.எல்..! Plan B-ல் UAE இல்லை..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR