பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள IPL தொடர் வரவிருக்கும் நிலையில் மீண்டும் நம் ஹர்பஜன் தமிழில் ட்விட் இட்டு களக்கியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL-2018 கிரிக்கெட் போட்டிகளின் 11-வது சீசன் அடுத்த மாதம் 7-ம் தேதி தொடங்கி வரும் மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 


சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காணுகின்றன. IPL தொடக்க விழா வரும் ஏப்ரல் 6-ந் தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் முன்னதாக கடந்த 22 ஆம் நாள் பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார்கள். இவர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சி ஆட்டத்திற்கே சென்னையில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.


ரசிகர்களிடைய பெரும் ஆர்வத்தினையும், எதிர்பார்ப்பினையும் தூண்டியுள்ள CSK அணி வீரர்கள் தொடர்ந்து தங்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது CSK அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...