செஸ் ஒலிம்பியாட் - தமிழக வீரர்களுக்கு இன்று இரண்டு வெற்றிகள்
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இன்று நடந்த நான்காவது சுற்று போட்டியில் குகேஷ் மற்றும் நந்திதா வெற்றி பெற்றனர். பிரக்ஞானந்தா ட்ரா செய்தார்.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்துவருகிறது. இதன் தொடக்க விழா கடந்த 28ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து செஸ் போட்டிகள் மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்ட அரங்கில் தொடங்கின.தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று நடந்தது. நேற்று நடந்த மூன்றாவது சுற்று ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி இந்தியாவின் ஆறு அணிகளும் வெற்றி பெற்றன.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நான்காவது சுற்று ஆட்டம் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இத்தாலி அணிக்கு எதிராக விளையாடிய தமிழ்நாடு வீரர் குகேஷ் வெற்றிப் பெற்றுள்ளார். இத்தாலியின் வோகடுரோவை எதிர்கொண்ட குகேஷ் 34ஆவது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
அதேபோல் ஜார்ஜியா அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை நந்திதாவும் வெற்றி பெற்றார். ஜார்ஜியா வீராங்கனையை எதிர்கொண்ட அவர் 42ஆவது நகர்த்தலில் வெற்றியடைந்தார்.
இதேபோல், மகளிர் பி அணியில் எஸ்தோனியா அணி வீராங்கனை நார்வாவை வந்திகா அகர்வால் வீழ்த்தினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் பிரக்ஞானந்தா இத்தாலி வீரர் லோடிசி லோரன்சோவை டிரா செய்தார்.
மேலும் படிக்க | INDvsWI: இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் என்ன என்ன மாற்றம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ