IPL 2019 தொடரின் 42-வது லீக் ஆட்டத்தில் இன்று பெங்களூரு ராயல் செலஞ்சர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2019 தொடரின் 42-வது லீக் ஆட்டம் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ரவிச்சந்திர அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதுகின்றன.


புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் இருக்கும் பெங்களூரு அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும் ப்ளா ஆப் சுற்றுக்கு முன்னேறுவது சந்தேகம் தான், ஆனால் 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இன்றை போட்டியில் வெற்றி பெற்று ப்ளா ஆப் சுற்றுக்கான வழியை விரிவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


நடப்பு தொடரில் முன்னாதக இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைப்பெற்ற போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் விக்கெட் இழப்புகளை குறைத்து 170 ரன்களுக்கு மேல் குவித்தது, இதன் மூலம் இரு அணிகளும் பேட்டிங் வரிசையில் சம பலம் கொண்டிருப்பதை நம்மால் அறிய முடிகிறது,


எனினும் இன்றைய போட்டி பெங்களூரு அணியின் கோட்டையான பெங்களூருவில் நடைபெறுவதால், இன்றைய போட்டி பெங்களூரு அணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முந்தைய போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிறிஸ் கெயில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 99*(64) ரன்கள் குவித்தார். பெங்களூரு அணி வீரராக இருந்து தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் கெயிலின் மீதான எதிர்பார்ப்பு இன்றைய போட்டியிலும் அதிகமாகவே உள்ளது.