"நான் இன்னும் ஒரு உலகக் கோப்பையை விளையாட விரும்புகிறேன். ஆனால் என்னை அனுமதிக்கமாட்டார்கள்" என்று கூறி மேற்கிந்தியத் தீவுகளின் சூப்பர் ஸ்டார் கிறிஸ் கெய்ல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கிந்தியத் தீவுகள் அணி டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது, நடப்பு சாம்பியனுக்கு ஐந்து ஆட்டங்களில் நான்காவது தோல்வி என்பது மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் கிறிஸ் கெய்ல் அடுத்த உலகக்கோப்பையில் தான் விளையாட விரும்புவதாகவும், ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கும் என்று தோன்றவில்லை என்று நிராசையை வெளிப்படுத்தினார்.


மேற்கிந்திய தீவுகளின் 38 வயதான டுவைன் பிராவோ, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதை உறுதிப்படுத்தினாலும், 42 வயதான 'யுனிவர்ஸ் பாஸ்'  கெய்ல், தனக்கு சர்வதேச கிரிக்கெட்டில் தொடர விருப்பம் இருப்பதை நாசூக்காக வெளிப்படுத்தியிருக்கிறார்.


"இது ஒரு அற்புதமான வாழ்க்கை. நான் ஓய்வை அறிவிக்கவில்லை" என்று கெய்ல் கூறினார்.


ALSO READ | பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் முன்னுள்ள சவால்கள்


வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட் "ஒரு தலைமுறையின் முடிவு" வந்துவிட்டதாக தெரிவித்தார்.  வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது அரையிறுதிப் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டது. பிராவோ, கெய்ல் இருவருக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் மரியாதை செலுத்தி, வழியனுப்பி வைத்தனர்.


"பிராவோ அனைத்து வீரர்களுக்கும் உத்வேகமாக இருந்தார், கிறிஸ், நான் எப்போதும் விரும்பும் ஒருவர்" என்று ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நேற்றைய ஆட்டத்தில் டேவிட் வார்னர், ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் எடுத்தார்.


மேற்கிந்தியத் தீவுகளின் 2012 மற்றும் 2016 டி20 உலகக் கோப்பை வெற்றிகளில் முக்கியப் பிரமுகர்களான பிராவோ மற்றும் கெய்ல் இருவருமே தற்போது சிறந்த ஃபார்மில் இல்லை.  


ஐக்கிய அரபு எமிரேட்ஸில், பிராவோ மொத்தம் 26 ரன்கள் எடுத்தார் மற்றும் ஐந்து ஆட்டங்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார்.


ALSO READ | வைரலாகும் லியோனல் மெஸ்ஸியின் இளம் வயது வீடியோ!


கெய்ல் 45 ரன்கள் எடுத்தார் மற்றும் அவரது சுழற்பந்து வீச்சில் ஒரு விக்கெட்டை எடுத்தார், சனிக்கிழமையன்று இரண்டாவது விக்கெட் எடுத்தார்.


அணியில் கெயிலின் பெயர் இடம் பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.


கடந்த ஐந்து ஆண்டுகளில் கெய்ல், ஒரே ஒரு டி20 சர்வதேச அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டியில் அவர் ஜோகன்னஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 117 ரன்கள் எடுத்தார்.


சனிக்கிழமையன்று, கெய்ல் அபுதாபி ஆடுகளத்தில் இரண்டு சிக்ஸர்களை உட்பட, 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.


ALSO READ | ஆஸ்திரேலியா vs சவுத் ஆப்பிரிக்கா! அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?


கெய்ல் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 7,214 ரன்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார். டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 333 ரன்கள் எடுத்தவர் கிறிஸ் கெய்ல்.


டான் பிராட்மேன், பிரையன் லாரா மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோருடன் டெஸ்ட் போட்டிகளில் இரு முறை மூன்று சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் கெய்லும் இடம் பெற்றுள்ளார்.


301 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கெய்ல், 10,480 ரன்களை அடித்துள்ளார். டி20 போட்டிகளில் இதுவரை கெய்ல் 1,899 ரன்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ALSO READ | விராட் கோலியின் குழந்தைக்கு மிரட்டல்; இன்சமாம் உல் ஹக் கண்டனம்


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR