பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் முன்னுள்ள சவால்கள்!

இந்தய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.    

Written by - RK Spark | Last Updated : Nov 6, 2021, 07:18 PM IST
  • சமீபத்தில் இந்திய டி20 அணியின் ஆலோசகராக எம்எஸ் தோனி யாரும் எதிர்பார்க்காத விதமாக நியமிக்கப்பட்டார்.
  • ரவிசாஸ்திரி பொறுப்பேற்ற பிறகு பல முக்கிய போட்டிகளில் இந்திய அணி வென்று இருந்தாலும் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை.
பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் முன்னுள்ள சவால்கள்!  title=

இந்திய அணி தற்போது உலக கோப்பை டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.  இந்த உலக கோப்பை போட்டிகள் முடிந்தவுடன் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைகிறது.  அதனால் அடுத்த தலைமை பயிற்சியாளராக யார் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு அனைவரது மனதிலும் இருந்தது. 

 

சமீபத்தில் இந்திய டி20 அணியின் ஆலோசகராக எம்எஸ் தோனி யாரும் எதிர்பார்க்காத விதமாக நியமிக்கப்பட்டார்.  இதனால் தோனி தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் தோனி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை.  இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் தொடங்குவதற்கு முன்பு ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் சென்றார்.  இவரது தலைமையில் இந்திய அணி ஒருநாள் போட்டியை வென்றது மற்றும் டி20 போட்டியில் தோல்வியுற்றது. 

 

ALSO READ ஓய்வில் இருந்து திரும்புவதாக அறிவித்த யுவராஜ் சிங்! மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பா?

 

தற்போது உலக கோப்பை போட்டிகள் முடிந்தவுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் பொறுப்பேற்க உள்ளார்.  பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் டிராவிட்டின் முன் பல சவால்கள் காத்திருக்கிறது.  ரவிசாஸ்திரி பொறுப்பேற்ற பிறகு பல முக்கிய போட்டிகளில் இந்திய அணி வென்று இருந்தாலும் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை.  இது பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் கேப்டன் கோலிக்கு மிகப் பெரும் பின்னடைவாக உள்ளது.  கேப்டன் விராட் கோலியும் தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலக உள்ளார்.  

 

dravid

 

வரும் ஆண்டுகளில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி ஐசிசி கோப்பைக்காக விளையாட உள்ளது. 2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி, 2021 - 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, 2023ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டி என மூன்று முக்கிய போட்டியை இந்திய அணி சந்திக்க உள்ளது.  கடைசியாக 2011ஆம் ஆண்டு 50வது உலககோப்பை போட்டி, 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றது இந்திய அணி.  அதன்பின் சாம்பியன்ஸ் டிராபி தவிர தற்போது வரை எந்த கோப்பையும் இந்திய அணி வெல்லவில்லை.  இந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பைனலில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.  மேலும், தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியில், அரையிறுதி செல்ல இந்திய அணி போராடி வருகிறது. 

 

இன்னிலையில் வரும் ஆண்டுகளில் மூன்று கோப்பைகளையும் இந்திய அணிக்கு பெற்றுத்தர ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.  இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் கோப்பைகளை வென்று தருவார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ளனர்.  மேலும் இந்திய அணியின் வீரர்கள் தேர்வில் பல முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

ALSO READ சஹாலின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News