ICC Awards 2019 வெற்றியாளர்களின் முழுமையான பட்டியல்...
உலக கோப்பை கிரிக்கெட் கோப்பை 2019 இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபியை வென்றுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் கோப்பை 2019 இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபியை வென்றுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள ICC Awards 2019 பட்டியலில் ICC ஆண்கள் (ஆண்டின்) கிரிக்கெட் வீரர் எனும் இடத்தை வென்றதன் மூலம் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபியை வென்றுள்ளார்.
ஜூலை 14-ல் லார்ட்ஸில் நியூசிலாந்தை எதிர்த்து இங்கிலாந்து முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற போட்டியில் ஸ்டோக்ஸ் ‘ஆட்ட நாயகன்’ விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
ICC Awards 2019 வெற்றியாளர்களின் முழுமையான பட்டியல் இங்கே:
ஆண்டின் நடுவர்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து)
இந்த ஆண்டின் T20I செயல்பாடு : பங்களாதேஷுக்கு எதிராக தீபக் சாஹரின் 6/7
ICC ஆண்கள் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்: மார்னஸ் லாபுசாக்னே (ஆஸ்திரேலியா)
ஆண்டின் இணை கிரிக்கெட் வீரர்: கைல் கோட்ஸர் (ஸ்காட்லாந்து)
ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது: விராட் கோலி (இந்தியா)
ICC ஒருநாள் கிரிக்கெட் வீரர்: ரோஹித் சர்மா (இந்தியா)
இந்த ஆண்டின் ICC டெஸ்ட் கிரிக்கெட் வீரர்: பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)
ICC ஆண்கள் ஆண்டின் கிரிக்கெட் வீரர் (சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி): பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
இந்திய பேட்டிங் மேஸ்ட்ரோ ரோஹித் சர்மா 2019-ஆம் ஆண்டின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒருநாள் சர்வதேச வீரராகவும், கேப்டன் விராட் கோலி ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2019-க்கான "ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்" விருதையும் வென்றுள்ளனர்.
பந்தை சேதப்படுத்தியதற்காக ஓராண்டு இடைநீக்கம் செய்த பின்னர் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை உற்சாகப்படுத்தும்படி ரசிகர்களை கேட்டுக்கொண்ட விராட் கோலிக்கு தற்போது "ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்" விருது அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேப்போல் நவம்பர் 10-ஆம் தேதி நாக்பூரில் ஏழு ரன்களைக் கொடுத்து, ஹாட்ரிக் உட்பட ஆறு பங்களாதேஷ் விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக 2019-ஆம் ஆண்டின் டி20 சர்வதேச செயல்திறனை மற்றொரு இந்திய வீரர் தீபக் சாஹர் தட்டி சென்றுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் ஹாட்ரிக் பதிவு செய்த ஒரே இந்திய ஆண் கிரிக்கெட் வீரர் சாஹர் என்ற பெருமையினையும் இப்போட்டியில் அவர் பெற்றார்.