குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்திய கிரிக்கெட் அணி...
குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வெள்ளியன்று காலை குஹாத்தி கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய கிரிக்கெட் அணி
குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வெள்ளியன்று காலை குஹாத்தி கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய கிரிக்கெட் அணி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில் குவஹாத்தில் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டி நடைபெறுமா என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில் தற்போது கிரிக்கெட் போட்டி நடைபெறும் என அசாம் கிரிக்கெட் அகாடமி தலைவர் ரோமன் தாத்தா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, BCCI மற்றும்அசாம் கிரிக்கெட் சங்கம் நிலைமை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், போட்டி இங்கு நடத்தப்படுவதில் பிரச்சனைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. என்றபோதிலும் தற்போது அசாம் கிரிக்கெட் சங்க தலைவர் ரோமன் தத்தாவின் கூற்றுப்படி நிலைமை அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளன.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "ஆமாம், இதற்கு முன்பு சில அமைதியின்மை இருந்தது, ஆனால் இப்போது அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளன. இரு அணிகள் தொடர்பாக அரங்கம் மற்றும் பிற அனைத்து பொறுப்புகளையும் நாங்கள் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம், எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உறுதி செய்ய அவர்கள் ஒரு முனைப்போடு இருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஆச்சரியம் என்னவென்றால், இந்திய வீரர்கள் வெள்ளிக்கிழமை காலை தான் ஆடுகளத்திற்கு வருவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார், அதேசமயம் இந்திய அணி நிர்வாக உறுப்பினர்கள் வியாழக்கிழமை இரவு கூடுவார்கள் எனவும் அவர் உறுதிப்படுத்தினர்.
மேலும் அவர் கூறுகையில்., "இலங்கை அணி இன்று மாலை 4 மணிக்கு வருகிறது, இந்திய அணி நாளை காலை வரும். ஆஸ்திரேலியாவில் நவம்பரில் நடைபெறும் உலக டி20 போட்டியில் இந்திய அணி சர்வதேச டி20 விளையாடுவதில் அதிக கவனம் செலுத்துகிறது. இது எல்லாம் இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்தே தொடங்குகிறது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்., ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களின் பணிச்சுமையை மனதில் வைத்து, இந்திய தேர்வாளர்கள் வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டியில் இருந்து அவருக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக அணியில் அவரது நிலைப்பாடு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானிடம் சென்றுள்ளது எனவும் குறிப்பிடுள்ளார்.
இதற்கு முன்னர், பங்களாதேஷுக்கு எதிரான சர்வதேச டி20 தொடரின் போது வழக்கமான கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டது, ரோஹித் அணியை வழிநடத்தினார். உண்மையில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவும் இலங்கை தொடரின் போது அணிக்குத் திரும்புவார். முன்னதாக மேற்கிந்தியத் தீவுகளின் இந்திய சுற்றுப்பயணத்திற்குப் பிறகு பும்ரா ஓய்வில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.