FIH ஹாக்கி ப்ரோ லீக் 2021/22 போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி சீன அணியை 7-1 என்ற கணக்கில் வெற்றியுடன் தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓமனின் மஸ்கட்டில் உள்ள சுல்தான் கபூஸ் வளாகத்தில் செவ்வாய் (2022, பிப்ரவரி 1) அன்று நடந்த பரபரப்பான போட்டியில், இந்தியா தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது. .


சவிதா தலைமையிலான இந்திய அணியின் வெற்றிக்கு குர்ஜித் கவுர் (3`, 49`) இரண்டு கோல்கள் அடித்து உதவினார். சீனாவின் ஷுமின் வாங் (39`) சீனாவுக்காக ஒரேயொரு கோலை மட்டுமே அடித்தார்.


இந்த வெற்றியின் மூலம் 2 ஆட்டங்களில் 6 புள்ளிகளுடன் நெதர்லாந்துடன் சமநிலையில் இருந்த இந்தியா, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.



சீனாவின் மிட்ஃபீல்ட்டைப் புறக்கணித்த இந்தியா (Indian Teram), முன்பக்கத்தில் போட்டியைத் தொடங்கியது. போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் இந்தியாவுக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய குர்ஜித், அதை சக்திவாய்ந்த ஹிட்டாக மாற்றி, ஒரு கோல் அடித்தார்.


ALSO READ | CAPTANICY: கேப்டனாக தோனியும் நானும்! மனம் திறக்கும் விராட் கோலி


உடனடியாக எதிர் தாக்குதலைத் தொடங்கிய சீனாவை இந்திய வீராங்கனைகள் வெற்றி பெறவிடவில்லை. வந்தனா கட்டாரியா கோல் அடிக்க முயன்றார். அந்த பொன்னான வாய்ப்பு, கோல்போஸ்ட்டிற்கு வெளியே சென்ற பநதினால் தவறிப்போனது.


முதல் சுற்றின் பெரும்பகுதியை இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, சீனாவை எந்த வகையிலும் முன்னேற இந்திய வீராங்கனைகள் அனுமதிக்கவில்லை, முதல் 15 நிமிடங்களுக்குளேயே, 1-0 என்ற முன்னிலையை தக்க வைத்துக் கொண்டது இந்தியா.


2வது சுற்றின் 26வது நிமிடத்தில் இடது புறத்தில் இருந்து நகர்த்த இஷிகா சவுத்ரி, கோல்போஸ்டின் முன் நின்று கொண்டிருந்த மோனிகாவிடம் பந்தை தள்ள முயன்றார். ஆனால் சீனா அதை தடுத்துவிட்டது.


ALSO READ | ’ 2007-ல் செய்த தவறு’ க்கு இப்போது வருந்தும் பாக்.,முன்னாள் கேப்டன்


மூன்றாவது காலிறுதியின் முதல் நிமிடத்திலேயே முன்னிலையை அதிகரிக்க ஷர்மிளா தேவிக்கு வாய்ப்பு கிடைத்ததால் இந்தியா இரண்டாவது பாதியை ஆக்ரோஷமாக தொடங்கியது. ஆனால் அது கோலாக மாறவில்லை.


சீனாவின் எதிர் தாக்குதல் தொடர, இடது பக்கத்திலிருந்து சீனாவின் ஒரு ஆபத்தான நகர்வை, இந்தியாவின் (Indian Teram) தற்காப்பு தடுப்பு தடுத்துவிட்டது.


இந்தியாவுக்கு கிடைத்த மற்றொரு பெனால்டி கார்னரால் கோல் எதையும் அடிக்க முடியவில்லை என்ற நிலையில், நான்காவது சுற்றில் பெனால்டி கார்னர் வாய்ப்புக் கிடைத்தாலும், பந்து கோல்போஸ்டுக்கு வெளியே சென்றது.


49வது நிமிடத்தில், நான்காவது காலிறுதியின் இரண்டாவது பெனால்டி கார்னரை இந்தியா பெற்றது, இந்த முறை, குர்ஜித் கவுர் மற்றொரு அருமையான டிராக்-ஃபிளிக் மூலம் கோலாக மாற்றினார், இதனால் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.


ALSO READ | இந்திய அணிக்கு திரும்பும் 3 முக்கிய வீரர்கள்..! டிராவிட் ப்ளான்


சீனாவின் கடும் முயற்சியால், இந்தியாவுக்கு கிடைத்த இரண்டு பெனால்டி கார்னர்களும் பலனளிக்கவில்லை. ளைப் பெற்றது, ஆனால் டீப் கிரேஸ் எக்காவால் அவற்றை கோல்களாக மாற்ற முடியவில்லை.


கடைசி இரண்டு நிமிடங்களில் இந்தியா ஆட்டத்தை மெதுவாக்கியது, சீனா கடும் முயற்சிகளுடன், போட்டியை சமன் செய்ய முயன்றது.


ஆனால், இந்தியாவின் பாதுகாப்பு அரணைத் தாண்டி கோல் அடிக்க முடியவில்லை. எனவே, இந்த விறுவிறுப்பான போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


இந்திய மகளிர் ஹாக்கி அணி (Indian Teram), நெதர்லாந்தை பிப்ரவரி 19 மற்றும் பிப்ரவரி 20 ஆம் தேதிகளில் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.


ALSO READ | இந்திய அணியில் 10 மாதங்களுக்குப் பிறகு சந்திக்கும் 2 தலைகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR