CAPTANICY: கேப்டனாக தோனியும் நானும்! மனம் திறக்கும் விராட் கோலி

டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி, கேப்டனாக தோனியும் நானும் என்பது பற்றி மனம் திறந்து தனது கருத்தை தெரிவிக்கிறார்.... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 1, 2022, 06:52 AM IST
  • இந்திய அணியின் சிறந்த முன்னாள் இந்திய கேப்டன்கள்
  • எதிர்காலத்தில் கிரிக்கெட் அணிக்கு யார் கேப்டன்?
  • கேப்டனாக இருந்தால்தான் சிறப்பாக செயல்பட முடியுமா?
CAPTANICY: கேப்டனாக தோனியும் நானும்! மனம் திறக்கும் விராட் கோலி title=

புதுடெல்லி: இந்த ஆண்டின் தொடக்கத்தில், டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்காவிடம் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்ததை அடுத்து, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார்.

அதனையடுத்து, டீம் இந்தியா கேப்டனாக, அவர் எந்தவித கிரிக்கெட் வடிவத்திலும் இல்லை. இப்போது இந்திய அணியின் ஒரு கிரிக்கெட்டர் கோலி. 

UAE இல் நடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு குறுகிய வடிவத்தின் கேப்டன் பதவியில் (Former Captain) இருந்து விலகுவதாக விராட் அறிவித்தார். ODI கேப்டன் பொறுப்பில் இருந்து பிசிசிஐ ஏற்கனவே கோஹ்லியை நீக்கிவிட்டது.

sports

இந்திய கேப்டன் பதவி மற்றும் கோஹ்லி தொடர்பான விவாதங்கள், முன்னெப்போதையும்விட மிகவும் அதிகமாக இருந்த நிலையில், டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கான அவரது முடிவு பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது,

அதற்குக் காரணம் விராட்டின் தலைமைப் பண்பும், இந்திய கேப்டனாக சிறப்பாக செயல்பட்டவர்களில் ஒருவர் என்ற சாதனைப் பதிவும் தான்.

33 வயதான கோலி, தனது கேப்டன் பதவி இறக்கம் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று தெளிவாக அறிவுறுத்திவிட்டு, தனது முன்னோடி எம்எஸ் தோனியின் உதாரணத்தை மேற்கோள் காட்டினார். இந்த பதிவுதான் இன்று கிரிக்கெட் உலகின் டாக் ஆஃப் த டவுன் ஆக இருக்கிறது.

ALSO READ | ’ 2007-ல் செய்த தவறு’ க்கு இப்போது வருந்தும் பாக்.,முன்னாள் கேப்டன்

"முதலில் எதைச் சாதிக்க விரும்புகிறீர்களோ, அந்த இலக்குகளை நீங்கள் அடைந்தீர்களா இல்லையா என்பதைப் பற்றிய முழுமையான புரிதல் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எல்லாவற்றுக்கும் ஒரு நேரமும் காலமும் உள்ளது, அதை அறிந்திருக்க வேண்டும். என்னால் அணிக்கு இன்னும் அதிகமாக கொடுக்க முடியும், அதனால் பெருமை கொள்கிறேன்" என்று கோஹ்லி நம்புகிறார்.

"தலைவராக இருப்பதற்கு கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எம்.எஸ். தோனி அணியில் இருந்தபோது, ​​அவர் கேப்டனாக இல்லாதபோதும் அவர் எப்படி செயல்பட்டார் என்பது தெரியும். வெல்வது அல்லது வெற்றி பெறாதது நமது கையில் இல்லை, ஆனால், சிறந்து விளங்குவது என்பதும், ஒவ்வொரு நாளும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதும் என்னுடைய விருப்பம். அதை குறுகிய காலத்தில் செய்துவிடமுடியுமா என்பது கேள்விக்குறி" என்கிறார் விராட்.

"அணிக்காக சில மாற்றங்களை எதிர்கொள்வதும், அந்த திசையில் முன்னேறுவதும் தலைமையின் ஒரு பகுதியாகும், அதைச் செய்வதற்கான சரியான நேரத்தைப் புரிந்துகொள்வது அவசியம். ஒருவர் எல்லா வகையான பாத்திரங்களையும் வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்".

ALSO READ | இந்திய அணிக்கு திரும்பும் 3 முக்கிய வீரர்கள்..! டிராவிட் ப்ளான்

எம்எஸ் தோனியின் கீழ் சிறிது காலம் விளையாடினேன். பிறகு நான் கேப்டனாக ஆனேன், அணியில் ஒரு வீரராக இருந்தபோது இருந்த மனநிலையிலேயே தான் எப்போதும் இருந்தேன் என்று விராட் கோலி தெளிவாக சொல்கிறார்.

ரோஹித் சர்மா இந்தியாவின் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். தற்போதைய நிலவரப்படி, கோஹ்லிக்கு மாற்றாக அனைத்து வகையான கிரிக்கெட் வடிவங்களிலும் இந்திய கேப்டனாக ரோஹித்தே இருக்கலாம் என்பதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. 

அதே நேரத்தில் கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் கேப்டன் பதவிக்கான மற்ற போட்டியாளர்களாக உள்ளனர்.

ALSO READ | இந்திய அணியில் 10 மாதங்களுக்குப் பிறகு சந்திக்கும் 2 தலைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News