கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மும்பையிலேயே இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஐபிஎல் அணி நிர்வாகம் மற்றும் வீரர்களுக்கு கடும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய முன்னெச்சரிக்கைகளுக்கு பின்னரும் டெல்லி அணி வட்டாரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரோகித் சர்மா செய்த இந்த 3 தவறுகளால் தோல்வி பாதையில் பயணிக்கும் மும்பை இந்தியன்ஸ்


ஏற்கனவே அந்த அணி வீரர்கள் 4 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவதற்கு முன்னதாக ஒரு வீரருக்கு கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் போட்டிக்கு முன்னதாக எடுக்கப்பட்ட டெஸ்டில் மிட்ஷல் மார்ஷூக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டிருப்பது டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. 



பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக், மசாஜ் தெரபிஸ் சேத்தன் குமார், மருத்துவர் அபிஜித் ஷால்வி, சோஷியல் மீடியாவைச் சேர்ந்த ஆகாஷ் மானே ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் வீரர்கள் கொரோனா பாசிடிவ் அதிகரிப்பு ஐபிஎல் நிர்வாகத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற அணி வீரர்களுக்கு கொரோனா பரவாத வண்ணம் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ள ஐபிஎல் நிர்வாகம், போட்டிகள் தடைபடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. 


மேலும் படிக்க | சிஎஸ்கே வீரருக்கு திருமணம் - வேட்டி சட்டையுடன் கொண்டாடிய தோனி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR