14:40 06-07-2019
இந்தியாவுக்கு எதிரான இன்றைய கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி பந்து வீச உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



லீட்ஸ்: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019, இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 44-வது லீக் ஆட்டம் லீட்ஸில் உள்ள ஹெடிங்க்லே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன.


தற்போது உலகக் கோப்பை போட்டி கடைசிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன. நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆகும்.


உலகக்கோப்பை புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இன்னும் ஒரு லீக் போட்டி உள்ளது. இன்று தனது கடைசி லீக் போட்டியில் இந்தியா இலங்கையை எதிர்க்கொள்கிறது. இந்த ஆட்டம் மாலை 3 மணிக்கு தொடங்கும். அதேபோல ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பரிக்கா அணியை எதிர்க்கொள்கிறது. இந்த போட்டி மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. 


இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாலும், முதலிடத்துக்கு முன்னேற வேண்டும் என்றால், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைய வேண்டும். 


ஒருவேளை இந்திய அணி முதலிடத்தை பிடித்தால் 4வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை அரையிறுதியில் சந்திக்கும். இரண்டாவது இடத்தில் இந்திய அணி இருந்தால், 3வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும். உலகக்கோப்பை போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டி ஜூலை 9 ஆம் தேதியும், 2வது அரையிறுதிப் போட்டி ஜூலை 11 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.


புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேற வேண்டும் என இந்திய அணியும், முதல் இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியா அணியும் விளையாடும் என்பதால், இன்றைய ஆட்டம் இரண்டு போட்டிகளும் விறுவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.