இப்படியொரு சகுணம் இருக்கா..! உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவது யார்?
உலக கோப்பை லீக் தொடரில் ரவுண்ட் ராபின் முறையில் முதலிடம் பிடித்த அணிகள் இதுவரை உலக கோப்பை வென்றாக சரித்திரமே இல்லையாம். இந்த முறை புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடம்.
ஐசிசி கோப்பை உலகக் கோப்பை 2023 அதன் இறுதிக் கட்டத்தில் உள்ளது. 45-போட்டிகள் கொண்ட லீக் ஸ்டேஜ் முடிந்துவிட்டது. இது நாக் அவுட்களுக்கான நேரம் இது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் ஒரு தோல்விகூட பெறாத அணி என்றால் அது இந்திய அணி தான். புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த அணி இந்தியா, நான்காவது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து அணியுடன் முதலாவது அரையிறுதிப் போட்டியிலும், இரண்டாவது இடத்தைப் பிடித்த தென்னாப்பிரிக்கா அணி மூன்றாவது இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலிய அணியையும் எதிர்கொள்கிறது.
2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடுவது யார்?
முதலாவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 15 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்திலும், 2வது அரையிறுதிப்போட்டி நவம்பர் 16 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும் நடைபெறுகிறது. இரு அரையிறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன
மேலும் படிக்க |ODI உலகக் கோப்பை அரையிறுதி: IND vs NZ மேட்ச் பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் XI
அரையிறுதியை மழை கைவிட்டால் என்ன செய்வது?
மழையின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அரையிறுதி உள்ளிட்ட நாக் அவுட் போட்டிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ரிசர்வ் நாளை வைத்துள்ளது. ரிசர்வ் நாளுக்குப் பிறகும் அரையிறுதிப் போட்டி கைவிடப்பட்டால், புள்ளிப் பட்டியலில் அதிக இடத்தைப் பிடித்த அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும்.
2023 ODI உலகக் கோப்பையை வெல்வது யார்?
1992 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர்கள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்றன. 1992 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியும், 2019 ஆண்டு இந்திய அணியும் முதல் இடத்தைப் பிடித்தன. ஆனால், இந்த இரு உலக கோப்பை தொடர்களிலும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற நடப்பு உலக கோப்பை லீக்கில் இந்திய அணி முதலிடம் பிடித்திருக்கிறது. ஆனால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்பது நவம்பர் 15 ஆம் தேதி தெரியும்.
மேலும் படிக்க | உலககோப்பை அரையிறுதிப் போட்டி: நீங்கள் கேள்விப்படாத 8 சுவாரஸ்யங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ