சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கின் 46 வது பிறந்த நாளையொட்டி, சென்னை அணி வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பின்னர் டிரஸ்ஸிங் ரூமிற்கு சென்ற சென்னை அணி வீரர்கள் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கின் 46 வது பிறந்த நாளை அடுத்து கேக் வெட்டி கொண்டாடினார்கள். முகத்தில் கேக் பூசி, பாடல்களை பாடி உற்சாகமாக கொண்டாடினார்கள். 


தற்போது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 



முன்னதாக 8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல் சீசனில், இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்துள்ளது.