முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு பதிலாக சென்னை அணியில் இடம் பெறப்போவது யார்?
CSK vs SRH IPL 2024: உலக கோப்பைக்கான விசா தொடர்பான வேலைகளை முடிக்க பங்களாதேஷ் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் தற்போது நாடு திரும்பியுள்ளார். அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாடமாட்டார்.
CSK vs SRH IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் அடுத்த சில ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார். ஐபிஎல் 17வது சீசன் முடிந்து ஒரு வாரத்தில் ஜூன் 1ம் தேதி ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடங்குகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் இந்த தொடர் நடைபெற உள்ளதால் இதற்கான விசா பயோமெட்ரிக் சோதனைக்காக முஸ்தாபிஸூர் தற்போது அவரது நாட்டிற்கு திரும்பியுள்ளார். முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் 2024ல் அதிக விக்கெட் எடுத்தவராகவும், சென்னை அணிக்கு முக்கியமான பவுலராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அடுத்த சில போட்டிகளில் அவர் இல்லாதது சென்னை அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும்.
மேலும் படிக்க | Mayank Yadav: மயங்க் யாதவின் வேகத்தில் வீழ்ந்த ஆர்சிபியின் மேக்ஸ்வெல், கிரீன்
ஐபிஎல் 2024ல் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் தோல்வியடைந்தது. ஏப்ரல் 5 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக போட்டியில் முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு பதிலாக சென்னை அணி மாற்று வீரரை களமிறக்க உள்ளது. அதே போல ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தையும் அவர் இழக்க நேரிடும். இந்நிலையில் அவருக்கு பதில் அணியில் யார் இடம் பெற போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் நிலவி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முஸ்தாபிஸூர் ரஹ்மானுக்கு பதில் இடம் பெற வாய்ப்புள்ள 3 வீரர்களை பற்றி பார்ப்போம்.
ஷர்துல் தாக்கூர்
ஷர்துல் தாக்கூர் இந்த சீசனில் தனது முதல் ஆட்டத்தை SRH அணிக்கு எதிரான துவங்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் எடுக்கப்பட்ட தாகூர் முதல் மூன்று போட்டிகளில் விளையாடவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக போட்டியில் முஸ்தாபிசுர் ரஹ்மான் இல்லாத நிலையில் அவர் அணியில் சேர்க்கப்படலாம். அணிக்கு விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் ஷர்துல் தேவையான விக்கெட்டை எடுத்து கொடுப்பார். பவுலிங் மட்டும் இன்றி ஷர்துல் பேட்டிங்கிலும் தனது பங்கை வழங்க முடியும்.
முகேஷ் சவுத்ரி
கடந்த சீசனில் காயம் காரணமாக விளையாடாத இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி இந்த சீசனில் முதல் மூன்று போட்டிகளில் விளையாடவில்லை. முஸ்தாபிசுர் இல்லாத நிலையில், அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்புள்ளது. முகேஷ் சவுத்ரி இதுவரை 13 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மகேஷ் தீக்ஷனா
இலங்கை அணியின் ஸ்பின்னர் மதீஷா பத்திரனா முதல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடினார். ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் பெஞ்ச் செய்யப்பட்டார். இந்நிலையில், முஸ்தாபிசுர் ரஹ்மான் இல்லாத நிலையில் அவர் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. தீக்ஷனா முந்தைய சீசனில் 13 ஆட்டங்களில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணிக்கு மிடில் ஓவரில் முக்கிய பந்துவீச்சாளராக இருந்தார். வெறும் 8 பொருளாதார விகிதத்தில் துல்லியமாக பந்து வீசினார். சென்னை அணி ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.
மேலும் படிக்க | மீட்டிங்கிற்கு லேட்டா வந்த இஷான் கிஷன்! தண்டனை கொடுத்த மும்பை இந்தியன்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ