14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தனர். சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பேர்ஸ்டோவ் 7 ரன்களுக்கு சாம் கரண் பந்தில் ஆட்டமிழந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால், பவர் பிளேவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) பெரிதளவில் அதிரடி காட்டவில்லை. பவர் பிளே முடிந்தபிறகும் சென்னை பந்துவீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்தி பந்துவீசினர். 10 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்தது. ரவீந்திர ஜடேஜா ஓவரில் 1 ரன் எடுத்த அவர் 35-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். என்கிடி ஓவரில் 1 சிக்ஸர், ஜடேஜா ஓவரில் 1 சிக்ஸர் அடித்து ஸ்டிரைக் ரேட்டை சற்று உயர்த்திய வார்னர் 50-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். ஆனால், அரைசதம் அடித்தவுடன் 57 ரன்களுக்கு என்கிடி பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார்.


2-வது விக்கெட்டுக்கு வார்னர், மணீஷ் இணை 106 ரன்கள் சேர்த்தது. அதே ஓவரில் பவுண்டரி அடித்த மணீஷ், அடுத்த பந்திலேயே பாப் டு பிளெஸ்ஸியின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். அவர் 46 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார்.


இந்த நிலையில் கடைசி ஓவரை கரண் வீசினார். கெதார் ஜாதவ் கடைசி 2 பந்துகளில் பவுண்டரி மற்றும் சிக்ஸரைப் பறக்கவிட்டு அதிரடி காட்டினார். 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தரப்பில் என்கிடி 2 விக்கெட்டுகளையும், சாம் கரண் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 


ALSO READ: Watch Video: வைரல் ஆகும் 'ராக்ஸ்டார் பிராவோ' வின் கொரோனா விழிப்புணர்வு பாடல்  


பின்னர் களம் இறங்கிய சென்னை அணி 2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது. 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழபின்றி 31 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் டுப்ளசிஸ் - ருத்ராஜ் கெயிக்வாட் சிறப்பாக விளையாடி வந்தனர். 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்தது. அப்போது வெற்றி பெற இன்னும் 60 பந்துகளில் 81 ரன்கள் தேவையாக இருந்தது. சென்னை அணியின் ருத்ராஜ் கெயிக்வாட் 36 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். அதே போல் சென்னை அணியின் தொடக்க வீரர் டூப்ளசிஸ் 32 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அசத்தினார். 


சிறப்பாக ஆடி வந்த ஓப்பனர் ருத்ராஜ் கெயிக்வாட் 75 ரன்களுக்கு அவுட்டானார். அப்போது 14 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. 18 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இறுதியில் சென்னை அணி 18.3 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது. ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஷித்கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ்.தோனி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரன், டுவைன் பிராவோ, ஷார்துல் தாகூர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ராபின் ஊத்தப்பா, சேதேஸ்வர் புஜாரா, கரண் ஷர்மா, மோயின் அலி, ஜேசன் பெஹ்ரென்ற்றோஃப், கிருஷ்ணப்பா கவுதம், லுங்கி நிகிடி, மிச்செ சாண்ட்னர், ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷோர், ஹரி நிஷாந்த்ம் என். ஜெஹதீசன், கெ.எம் ஆசிஃப், ஹரிஷங்கர் ரெட்டி, பகத் வர்மா 


சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், விராட் சிங், கேதார் ஜாதவ், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ரஷீத் கான், ஜகதீஷா சுசித், கலீல் அகமது, சித்தார்த் கவுல், விருத்திமான் சஹா, புவனேஷ்வர் குமார், மனிஷ் பாண்டே, முகமது நபி, ஜேசன் ராய், ஷாபாஸ் நதீம், ஜேசன் ஹோல்டர், சந்தீப் சர்மா, பசில் தம்பி, முஜீப் உர் ரஹ்மான், பிரியம் கார்க், அப்துல் சமத்


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR