தோனி கோபப்படக்கூடிய ஒரே விஷயம் இதுதான் - மேத்யூ ஹைடன்
CSK`s Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றால் கூட கவலைப்படமாட்டார் தோனி, ஆனால் பீல்டிங்கில் மட்டும் தவறு செய்துவிட்டால் உடனடியாக அவரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என சிஎஸ்கே முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
தோனி தலைமையிலான சிஎஸ்கே
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான கேப்டன்கள் வரிசையில் தோனிக்கு எப்போதும் முதல் இடம் உண்டு. அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை கோப்பைகளை வென்று, கேப்டன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் அதிக முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற அணி என்ற அடிப்படையில் தோனியின் சிஎஸ்கே தான் முதலிடம். இவ்வளவு வெற்றிகளுக்கு காரணம் தோனியின் கூலான அணுகுமுறை என எல்லோரும் சுட்டிக்காட்டுவதுண்டு. அதாவது அவரை இப்போது வரை எல்லோரும் கேப்டன் கூல் என்றே அழைக்கிறார்கள்.
தோனி கோபப்படுவார்
ஆனால் தோனி களத்தில் கோபப்படுவார் என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். கூலாக இருக்கும் தோனி போட்டியில் தோல்விக்கு காரணமான வீரரை கூட திட்டமாட்டார், பீல்டிங்கில் தவறு செய்பவர்கள் நிச்சயம் அவரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் எனவும் ஹைடன் கூறியிருக்கிறார்.
தோனியின் கோபம் குறித்து ஹைடன் பேசும்போது, " தோனி கோபப்படமாட்டார் என எல்லோரும் நினைக்கிறார்கள். தோனிக்கு உண்மையில் கோபம் வரும். எப்போது என்றால் யாராவது பீல்டிங்கில் தவறு செய்யும்போது நிச்சயம் அவர்கள் தோனியின் கோபத்தை பார்ப்பார்கள்" என தெரிவித்தார்.
மேலும் படிக்க | IPL 2024 Players Auction: எந்தெந்த பிளேயருக்கு எவ்வளவு விலை..! - முழு விவரம்
சுரேஷ் ரெய்னா ரியாக்ஷன்
தோனியின் கோபம் குறித்து சுரேஷ் ரெய்னாவிடமும் பலமுறை கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஒருமுறை அவர் பதிலளிக்கும்போது, " தோனிக்கு கேட்ச் பிடிக்காமல் விட்டாலோ, பீல்டிங்கில் பந்தை பிடிக்க தவறினாலோ கடுமையான கோபம் வரும். அவர்களை அப்போது திட்டமாட்டார். ஓவர்களுக்கு இடையே கடுமையாக திட்டுவார். ஆனால் இது எந்த கேமராவிலும் பதிவாகாது. ஏனென்றால் முகத்தை கோபமாக காட்டாமல் திட்டுவது தோனியின் இயல்பு" என கூறியுள்ளார். இப்போது அதே பதிலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
தோனியின் கடைசி ஐபிஎல்
இதற்கிடையே தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியாக இந்த தொடர் இருக்கும் என ரசிகர்கள் யூகித்துள்ளனர். அவர் 40 வயதைக் கடந்திருப்பதால் இந்த தொடருக்கு மேல், தொடர்ந்து விளையாடுவது கடினம். ஏற்கனவே முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் தோனி, உடல்நிலை ஒத்துழைத்தால் மட்டுமே ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என தெரிவித்திருக்கிறார். அதனால் அவரை கடைசியாக ஐபிஎல் களத்தில் நேரடியாக பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | ரிங்கு சிங்: இந்திய அணியின் அடுத்த யுவராஜ் சிங்கா? - கவாஸ்கர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ