IPL 2024 மினி ஏலத்தில் சிஎஸ்கே குறி வைக்கும் 4 வீரர்கள்...!
CSK Auction Plan 2024: ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த பிளேயர்களை டார்கெட் செய்ய இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. பென்ஸ்டோக்ஸ் மற்றும் அம்பத்தி ராயுடுவுக்கு மாற்றாக 4 பிளேயர்களை ஏலத்தில் குறிவைக்கப்பட இருக்கின்றனர்.
Chennai Super Kings: ஐபிஎல் 2024 ஏலத்தில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரை வாங்க திட்டமிட்டுள்ளது என்பது சீக்ரெட்டாக இருக்கிறது. இருப்பினும் 4 வீரர்களை அந்த அணி டார்கெட் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட மாட்டார்கள். அவர்கள் இரண்டு பேரின் இடமும் மிக முக்கியமான இடம். இதற்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்ய தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஆகியோர் ஒரு ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ளனர்.
ஸ்டீபன் பிளெம்மிங் பிளான்
ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் ரூல் இருப்பதால் அதற்கு ஏற்பவும் யாரை தேர்வு செய்யலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆலோசித்து குறிப்பிட்ட பிளேயர்களை இறுதி செய்து வைத்திருக்கிறது. அதில் முதல் இடத்தில் இருப்பவர் நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டேரி மிட்செல். இவர் உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்காக மிக சிறப்பாக நியூசிலாந்து அணிக்காக விளையாடினார். அவரை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டமிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியிளார் ஸ்டீபன் பிளெம்மிங் நியூசிலாந்துகாரர் என்பதால் மிட்செல் சிஎஸ்கே அணிக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மிட்செல் சானட்டர் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி வீரர்கள்.
மேலும் படிக்க | IPL Auction 2024: ஐபிஎல் ஏலம் எங்கே, எப்போது, எப்படி பார்ப்பது?
ஆஸ்திரேலிய வீரர்கள்
டேரி மிட்செலுக்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு இருக்கிறது. ஏலத்தில் சிஎஸ்கே எதிர்பார்க்கும் தொகைக்குள் அவர் வந்தால் சிஎஸ்கே பரிசீலிக்க தயாராக இருக்கிறது. அதிவேகப்பந்து வீச்சாளர்கள் ஒருவரை அணிக்கு கொண்டுவர வேண்டும் என்ற பிளானில் சிஎஸ்கே இருக்கிறது. கேப்டன் தோனியின் விருப்பமும் கூட. அதனால் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோரை வாங்கவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராக இருக்கிறது. இதுதவிர தென்னாப்பிரிக்கா அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்டு கோட்ஸியும் சிஎஸ்கே ரேடாரில் இப்போது இருக்கிறார்.
சிஎஸ்கே டார்கெட்
எதிர்பார்க்கும் ஏல தொகைக்குள் இந்த பிளேயர்கள் வந்தால் நிச்சயம் சிஎஸ்கே அவர்களை தட்டி தூக்கிவிடும். அதில் ஜெரால்டு கோட்ஸிக்கு அதிக முன்னுரிமை கொடுக்க திட்டமிட்டுள்ளது. ஏனென்றால் நீண்டகாலம் அணிக்கு விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முனைப்பு காட்டும். வெளிநாட்டு பிளேயர்களை தவிர்த்து இந்திய ஏ அணி மற்றும் உள்ளூர் அணிகளில் விளையாடிக் கொண்டிருக்கும் இளம் பிளேயர்களையும் சிஎஸ்கே தேர்வு செய்து வைத்திருக்கிறது. அவர்களில் யாருக்கு ஜாக்பாட் அடிக்கும் என்பது நாளை மாலை தெரியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ