பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் தொடங்கியுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் பெண்கள் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக உள்ள மிதாலி ராஜ், பெண்கள் கிரிக்கெட்டில் 6வது உலகக்கோப்பை விளையாடும் முதல் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், உலகளவில் 6 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய இரண்டு வீரர்களான சச்சின் தெண்டுல்கர் மற்றும் ஜாவித் மியாண்டட் உடனான சாதனைப் பட்டியலில் தன்னையும் இணைந்து கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அன்று சச்சின், இன்று ஜடேஜா! இந்திய அணியில் தொடரும் சர்ச்சை!


இந்திய அளவில் பார்க்கும்போது சச்சின் மட்டுமே 6 கிரிக்கெட் உலகக்கோப்பை விளையாடியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மிதாலி ராஜ் 6வது உலகக்கோப்பையில் களமிறங்கியுள்ளார். பெண்கள் கிரிக்கெட்டில் இப்படியொரு மகத்தான சாதனையை படைத்துள்ள அவருக்கு உலகம் முழுவதும் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 



முதன் முதலாக 2000 ஆம் ஆண்டில் முதல் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு களமிறங்கினார் மிதாலி ராஜ். அடுத்ததாக 2005, 2009, 2013 மற்றும் 2017, 2022 ஆம் ஆண்டு உலககோப்பைகளில் விளையாடியுள்ளார். மவுண்ட்மனுங்கானுயில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை 2022 -ன் முதல் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் குவித்தது. 



ஸ்மிருதி மந்தனா 52 ரன்களும், தீப்தி சர்மா 40 ரன்களும் எடுத்தனர். பின்வரிசையில் அதிரடியாக விளையாடிய ரானா 48 பந்துகளில் 53 ரன்களும், பூஜா வஸ்டிராக்கர் 59 பந்துகளில் 67 ரன்களும் குவித்தனர். இதனையடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் பெண்கள் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது. இந்திய அணி வெற்றியுடன் உலகக்கோப்பை 2022-ஐ தொடங்கியுள்ளது. 


மேலும் படிக்க | விரைவில் இந்த இந்திய கிரிக்கெட்டர ஓய்வை அறிவிக்கக்கூடும்! காரணம் ரோஹித்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR