விரைவில் இந்த இந்திய கிரிக்கெட்டர ஓய்வை அறிவிக்கக்கூடும்! காரணம் ரோஹித்?

ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் காரணமாக இந்திய கிரிக்கெட் விரைவில் ஓய்வை அறிவிக்கக்கூடும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 6, 2022, 06:00 AM IST
  • ரோஹித் ஷர்மாவால் வாய்ப்பு இழந்த வீரர்
  • விரைவில் ஓய்வை அறிவிக்கிறாரா இந்த சிறப்பான தொடக்க வீரர்?
  • அணியில் இடம் பெற முடியாத திறமைசாலி கிரிக்கெட்டர்
விரைவில் இந்த இந்திய கிரிக்கெட்டர ஓய்வை அறிவிக்கக்கூடும்! காரணம் ரோஹித்? title=

புதுடெல்லி: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் ரோஹித் ஷர்மா தற்போது கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் கேப்டனாக உள்ளார். ரோஹித் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் எப்போதுமே பெயர் பெற்றவர். ஆனால் விரைவில் ஓய்வை அறிவிக்கக்கூடிய வீரர் ஒருவர் இருக்கிறார்.

புதுடெல்லி: விராட் கோலிக்கு பதிலாக சமீபத்தில் ரோஹித் சர்மா இந்திய அணியின் மூன்று வடிவ கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரோஹித் எப்போதுமே வீரர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகளை வழங்குவதில் பெயர் பெற்றவர், ஆனால் ரோஹித் காரணமாக பல வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். 

சில மூத்த வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சில புதிய வீரர்களுக்கும் கேப்டன் ரோஹித் ஷர்மா வாய்ப்பு அளித்துள்ளார். ஆனால் ரோஹித் கேப்டனாவதற்கு முன்பே அணியில் இருந்து வெளியேறிய வீரர் ஒருவர் இருக்கிறார். இப்போது இந்த வீரர் விரைவில் ஓய்வை அறிவிக்கலாம்.

மேலும் படிக்க | IPL2022: சிஎஸ்கே-வில் இருந்து வெளியேறப்போகும் மற்றொரு வீரர்

இந்த வீரர் விரைவில் ஓய்வு பெறுவார்
டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். ரோஹித்தின் வருகையால், சேட்டேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே போன்ற மூத்த வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். 

இவர்கள் வரிசையில் மற்றொரு மூத்த வீரர், நீண்ட காலமாக அணிக்கு வெளியே இருக்கிறார்/ இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் முரளி விஜய் ஒரு காலத்தில் இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய தொடக்க ஆட்டக்காரர். 

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விஜய் அணியில் இடம் பெறவில்லை. 2018 டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முரளி விஜய் தனது கடைசி டெஸ்ட் போட்டியில்  விளையாடினார். 

மேலும் படிக்க | கேப்டன் ரோகித்சர்மா மற்றும் ராகுல் டிராவிட் மீது ரசிகர்கள் கடும் விமர்சனம்

அதன் பிறகு மயங்க் அகர்வாலும், பின்னர் ரோஹித் ஷர்மாவும் அணியில் அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க, முரளி விஜய்க்கு இடம் கிடைக்கவில்லை. இனிமேல் விஜய் மீண்டும் அணியில் இடம் பெறுவாரா என்று தெரியவில்லை. 

ஏனெனில் விஜய் கிரிக்கெட்டில் அவ்வளவாக சுறுசுறுப்பாக இல்லை, அதிலும் தற்போது ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக மாறியுள்ளார்.

சிறந்த தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா தற்போது இந்திய அணியின் சிறந்த தொடக்க பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் இருக்கிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் உலகையே ஆண்ட ரோஹித், முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் சதம் எதுவும் அடிக்கவில்லை, ஆனால் சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் அற்புதமாக விளையாடினார். 

ரோஹித் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ளார், தற்போது ரோஹித்தின் இந்த சாதனையை வேறு எந்த பேட்ஸ்மேனும் நெருங்கவில்லை.

sports
முரளி விஜய்யின் கிரிக்கெட் வாழ்க்கை
முரளி விஜய் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 61 போட்டிகளில் விளையாடி 3982 ரன்கள் எடுத்துள்ளார். அதில்,12 சதங்கள் அடித்துள்ளார். 

ஆனால் முரளி விஜய்க்கு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிக வாய்ப்புகள் கிடைக்காததால் அவரால் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக அணியில் இருந்து வெளியில் இருக்கும் அவர், இனிமேல் அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அருகிவிட்டன.

ஏனென்னில், தற்போது ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல் என இந்திய அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். இதைப் பார்க்கும்போது எதிர்வரும் காலத்தில் முரளி விஜய்க்குக் அணியில் இடம் கூட கிடைக்காது என்றே தோன்றுகிறது.

மேலும் படிக்க | காலத்தால் அழியாத ஷேன் வார்னின் முக்கிய சாதனைகள்!

மூன்று வடிவங்களுக்கும் கேப்டனானார் ரோஹித் 
தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வடிவங்களிலும் கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்றுள்ளார். விராட் கோலிக்கு பதிலாக ரோஹித் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் ரோஹித்தின் சிறப்பான கேப்டனாக இருந்து இந்திய அணியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். 

ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோஹித் அதே அற்புதத்தை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | வார்னே இந்த விஷயத்துக்கு அடிமையாக இருந்தார் - மைக்கேல் கிளார்க்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News