CWG 2022: ஆஸ்திரேலியாவிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி!
CommonWealth Games 2022: காமன் வெல்த் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றது.
பர்மிங்காம்: ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெள்ளி பதக்கம் வென்றது. சில மோசமான பேட்டிங் மற்றும் ஷாட் தேர்வுகள் மூலம் 13 ரன்களுக்கு கடைசி ஐந்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா வென்றுவிடும் என்று எண்ணிய நிலையில் கடைசி கட்டத்தில் மாற்றம் நிகழ்ந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி பெத் மூனி (41 பந்துகளில் 61) அரை சதம், இந்தியாவின் பீல்டிங் முயற்சியையும் மீறி ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எட்ட முடிந்தது.
கடைசி ஆறு ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் கைவசம் இருக்க, 50 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹர்மன்பிரீத் (43 பந்தில் 65) ஒரு சிறப்பு இன்னிங்ஸின் ஆடியும் அது இந்தியாவுக்கு கைகொடுக்கவில்லை. எவ்வாறாயினும், இந்தியா 32 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்ததால் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. இந்தியாவின் இந்த பேட்டிங் சரிவு 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை நினைவுபடுத்துகிறது.
மேலும் படிக்க | சூர்யகுமார், பந்த், இஷான் கிஷன் வேண்டாம்! இவர் தான் சரி - முன்னாள் வீரர் கருத்து!
தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்க்கு பிறகு 96 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்மன்ப்ரீத் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (33 பந்துகளில் 33) சிறப்பாக பேட்டிங் செய்தனர். அடுத்து களமிறங்கியவர்கள் ரன்கள் அடிக்க தவறினர். மூன்று ரன் அவுட்கள் போட்டியின் திசையை மாற்றியது. 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 14.3 ஓவர்கள் மற்றும் 15.5 ஓவர்கள் இடைவெளியில், ஒன்பது பந்துகளுக்குள் இந்தியா ஆட்டத்தை இழந்தது. சனிக்கிழமையன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் அறிமுகமானது பெரும்பாலும் வெற்றிகரமானது என்றும் கூறலாம்.
மேலும் படிக்க | IND vs WI 4 T20: புதிய சாதனை படைத்த ரோஹித் ஷர்மாவின் இந்தியா அணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ