சூர்யகுமார், பந்த், இஷான் கிஷன் வேண்டாம்! இவர் தான் சரி - முன்னாள் வீரர் கருத்து!

T20 Worldcup 2022: டி20 உலககோப்பை 2022 அணியில் பிசிசிஐ பிரிதிவ் ஷா-வை தேர்வு செய்யலாம் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.    

Written by - RK Spark | Last Updated : Aug 7, 2022, 12:40 PM IST
  • உலக கோப்பைக்காக பல வீரர்களை சோதிக்கும் இந்திய அணி.
  • அடுத்ததாக ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது.
  • ஓப்பனிங் வீரர் தேர்வில் பல வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறது.
சூர்யகுமார், பந்த், இஷான் கிஷன் வேண்டாம்! இவர் தான் சரி - முன்னாள் வீரர் கருத்து! title=

இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் வரிசையில் பல்வேறு இடங்களுக்கு மாற்றுகளை வழங்கும் முயற்சியில் ரிஷப் பந்த் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தொடக்க ஆட்டக்காரர்களாக பரிசோதித்து வருகிறது பிசிசிஐ. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தீப் தாஸ்குப்தா, 2022 டி20 உலகக் கோப்பையை மனதில் கொண்டு, கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவுக்குப் பின் மூன்றாவது தேர்வு தொடக்க ஆட்டக்காரராக புதிய பெயரை முன்மொழிந்துள்ளார்.  டி20 சர்வதேச போட்டிகளில், ராகுல் மற்றும் ரோஹித் இந்தியாவின் விருப்பமான தொடக்க ஜோடி. ராகுலைத் தேர்வு செய்ய முடியாததால், பந்த் மற்றும் சூர்யா தொடக்க ஆட்டக்காரர்களாக முயற்சிக்கப்பட்டனர். இருப்பினும், தேர்வாளர்கள் ப்ரித்வி ஷாவை பேக் அப் ஓப்பனராக முயற்சிக்க வேண்டும் என்று தாஸ்குப்தா கூறியுள்ளார்.

"கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி20 உலகக் கோப்பைக்கு எனது முதல் தேர்வு. மூன்றாவது தொடக்க வீரராக பிரித்வி ஷா, ஓப்பனர் ஸ்லாட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் எளிதாக 70, 80 அல்லது 100 ரன்களை அடிக்க கூடும்.  இஷான் கிஷான் சிறப்பாக ஆடி வந்தாலும், சமீபத்தில் அவர் சொதப்பி வருகிறார்.  15வது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்திய அணியில் பல புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அவர்களில் ஒரு குறிப்பிட்ட வீரர்கள் மட்டுமே நன்றாக ஆடி வருகின்றனர்.  பல விக்கெட் கீப்பர்களும் நல்ல பேட்டர்களாக உள்ளனர். இஷான் கிஷன், ரிஷப் பந்த், கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக் போன்றோர் தற்போது அணியில் உள்ளனர்.  

மேலும் படிக்க | IND vs WI 4 T20: புதிய சாதனை படைத்த ரோஹித் ஷர்மாவின் இந்தியா அணி!

 

2022 டி20 உலகக் கோப்பையில் மூன்று விக்கெட் கீப்பர்களைக் கொண்ட ஒரு அணியை இந்தியா களமிறக்க முடியும்.  இந்திய XI-ல் 2-3 விக்கெட் கீப்பர்களை விளையாடுவீர்கள். உதாரணமாக- கேஎல் ராகுல் தொடக்க ஆட்டக்காரராகவும், ரிஷப் பந்த் மிடில் ஆர்டராகவும், தினேஷ் கார்த்திக் ஃபினிஷராகவும் களமிறக்கலாம்" என்று கூறினார்.  உலக கோப்பை அணிக்காக இந்தியா பல்வேறு வீரர்களை தற்போது முயற்சி செய்து வருகிறது.  இருப்பினும், ஆசிய கோப்பையில் சிறந்து விளையாடும் வீரருக்கே உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் படிக்க | அடித்தது ஜாக்பார்ட்! கேஎல் ராகுல் இடத்தில் ஹர்திக் பாண்டியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News